Monday, September 1, 2014

பொன் மாணிக்கவேல்.ஐ.பி.எஸ்.


  பொன் மாணிக்கவேல்.ஐ.பி.எஸ்.

எத்தனை பேருக்கு இவரை பற்றியும் இவரது ஆக்ஸன் பற்றியும் தெரியும்? கொஞ்சம் படித்து பாருங்கள் உங்கள் உடம்பே சிலிர்க்கும்.....
போலீஸ்துறையில், "கறார் அதிகாரி' என்று பெயர் பெற்ற பொன் மாணிக்கவேல்.....!!!!!!!
'பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல!' என்ற டயலாக் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்குப் பொருந்தும்! தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் எஸ்.பி-யாக இருந்தபோது, இவரது அதிரடிகளுக்கு அளவே இல்லை. இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல அதிகாரிகள் இடமாற்றம் வாங்கி ஓடியது உண்டு , . இதில் ஓமலூர் டி.எஸ்.பி மணிரத்தினம் ரொம்பவே நொந்து போய் வீட்டை விட்டு ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைமறைவாகக் கண்ணாமூச்சி காட்டிய கதையை ஒருவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இவரது அதிரடியான ஆக்ஸன் எல்லாம் போலீஸ் அதிகாரிகளுக்குத்தான்... ஆதரவு இல்லாத பொது மக்களுக்கோ இவர் எப்போதுமே கைகொடுக்கும் செல்லம் இந்த பொன்.மாணிக்கவேல்,
சென்னை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தபோது, கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த இரண்டுகாவலர்களை, தெருவில் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து செமத்தியாக மொத்தி எடுத்துப் பரபரப்பூட்டியவர் பொன்.மாணிக்கவேல். அவரது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஆனால் காவல்துறையினர் அவருக்கு எதிரிகளாகமாறினர்.
இதனால் செங்கல்பட்டு கிழக்கிலிருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டார் பொன். மாணிக்கவேல். அங்கும் அவரது அதிரடியான ஆக்ஸன் தொடர்ந்ததால், கள்ளச்சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர்பீதியடைந்தனர். .
இந்தசம்பவத்திற்குப் பிறகு கோவைக்கு மாற்றப்பட்டார் பொன்.மாணிக்கவேல். அங்கும் அவருக்கு காவல்துறையினர் ரூபத்தில் பிரச்சினை உருவானது. பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகளைக்கண்டு அரண்டு போன கோவை சக அதிகாரிகள் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மேலிடத்தில் புகார் மேல் புகாராக அனுப்பிவந்தனர். இதனால் பொன்.மாணிக்கவேலை சற்று ஆறப் போடும் விதமாக, அவரைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் தள்ளியது தமிழக அரசு.. மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பொறுப்பு ஏற்கிறார். மதுரைஅமலாக்கப் பிரிவில் பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொன்.மாணிக்கவேலின் வருகையால் இந்த வழக்குகள் சூடுபிடிக்கும், மதுரை வட்டாரத்தில் அணல் பறக்கும் எனஎதிர்பார்க்கலாம்.
இவருக்கு கடந்த சில ஆண்டு காலம் இவருக்கு வனவாசம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுரை பட்டாலியன் கமாண்டன்ட், பழநி பட்டாலியன் கமாண் டன்ட், ரயில்வே டி.ஐ.ஜி. என மக்களோடு நேரடித் தொடர்பு இல்லாத இடங்களில் பணியாற்றி மீண்டும் வந்திருக்கிறார்! கீழ்மட்ட ஊழியர்களிடம் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார், தற்போது அவரை மீண்டும் ஆக்ஷனில் இறக்கியுள்ளது அரசு , பொன்.மாணிக்கவேலின் வருகையால் இந்த வழக்குகள் சூடுபிடிக்கும், இவர் இருக்கும் மாவட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்க படுகிறது,
எனக்கு மிகவும் பிடித்த இவரது வேகம் ,
ஒருமுறை மதிப்பிற்குரிய பொன் மாணிக்கவேல் எஸ்பி"யாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் ஒரு தற்கொலை கேஸ், ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்த செய்திகேட்ட நமது பொன் மாணிக்கவேல் அவர்கள் நேரே ஸ்பாட்டுக்கு போனார்...பிணத்தை பார்த்துவிட்டு மாப்பிளையை வண்டியில் அள்ளி போட்டு கொண்டு காவல் நிலையத்துக்கு வந்துவிட்டார்,
காரணம் :- அது தற்கொலை அல்ல கொலை என்று சொன்னார் . பத்திரிக்கை நிருபர்கள் "அதெப்பிடி சார் அது தற்கொலை இல்லை கொலைன்னு கண்டு பிடிச்சீங்க...?" என்று கேட்டதுக்கு எஸ்பி சொன்னார் "தற்கொலைன்னா உடம்பு முழுவதும் எரிந்து போயிடும், கொலைன்னா ஒருப்பக்கம் மட்டுமே எரிந்து இருக்கும், கொலையாளிகள் எங்களிடம் மாட்ட சில தடயங்களை விடுவார்கள் அல்லவா அதுல இதுவும் ஒன்று" என்று சொல்ல நிருபர்கள் வாயடைத்துப் போனார்கள்!
 
தொடரும்.

1 comment:

  1. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக என்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீது இந்திய தண்டணை சட்டம 1860 ன் பிரிவு 495 ன் கீழ் நடவடிக்கை ஏடுக்கக் கோரி கடந்த 21-04-2015 அன்று சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் 30-04-2015 அன்று என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து எனது புகார் மனுவை நான் வாபஸ் பெற்றுக் கொண்டதாக என்னிடம் எழதி வாங்கிக் கொண்டு CSR 308/2015 என்னிடம் கொடுத்தனர் ஆகவே நான் 07-05-2015 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏனது வாழ்வுரிமை சம்மந்தமான பிரச்சனை காரணமாக எனது புகார் மனு மீது என்ன நடவடிக்கை மேற்கொளள்ளப்பட்டது என தகவல் கேட்டு விண்ணப்பித்தேன்எனது விண்ணப்பத்தை 08-05-2015அன்றுபெற்றுக்கொண்ட காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்கள் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து இனி மேல் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு அனுப்பினால் உன்னை ரிமாணட் பண்ணிருவேண்டா சைக்கோ . மெண்டல் .என திட்டினார் ஆனால் தகவல் தரவில்லை ஆகவே நான் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் எண் மூன்றில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக என்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீதம் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தேன் என்னை விசாரணை செய்த நீதிபதி அவர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு ஏவுரை அனுப்பினார் CRMP NUMBER :1017/2015 நாள் 14-05-2015 இந்த ஏவுரையில் இரண்டு மாதங்களுக்குள் உரிய விசாரணை செய்து சம்மந்தபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . ஆனால் கடந்த 07-07-2015 அன்று இந்திய தண்டணை சட்டம் 495 மற்றும்417 ஆகிய சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து என்னிடம் 10-07-2015 அன்று முதல் தகவல் அறிக்கையின் நகல் கொடுத்தனர்பிறகுநான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் வீட்டுக்கு சென்ற சாணார்பட்டி காவல் துறையினர் என் பெற்றோரிடம் ஏய்பொம்பளைங்க எத்தனை திருமணம் வேண்டுமானலும் செய்து கொள்ளலாம் என சட்டத்தில் உள்ளது உன் மகனை ஒழங்க RCS ல கையெழுத்து போட வரச் சொல் என தொந்தரவு செய்தனர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குஆதரவாக சாணார்பட்டி காவல் துறை செயல் பட்டு கொண்டுள்ளது எனக்கு இன்னும் குற்ற விசாரணை இறதி அறிக்கை நகல் வழங்கவில்லை இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த வித நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கவில்லை ஆகவே திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடு மற்றும் சட்ட விரோத செயல்களை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete