Tuesday, November 27, 2018

Sunday, September 16, 2018

சிலைத்திருட்டை ஒழிக்க வந்த பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ்.


சிலைத்திருட்டை ஒழிக்க வந்த பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ்.


அவர் எஸ்.பியாக இருந்தபோது நடந்த சம்பவம் இது...

ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வருகிறது...சம்பவ இடத்துக்கு விரைகிறார் எஸ்.பி... பெண் உடல் அறையின் நடுவில் எரிந்துகிடக்கிறது... உடலை அகற்றும்போது உற்றுக்கவனித்த அவர் அந்தப்பெண்ணின் கணவனை கைது செய்ய உத்தரவிடுகிறார்... விசாரணையில் தன் மனைவியை தானே எரித்துகொன்றதை கணவன் ஒத்துக்கொள்கிறான்...

எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று நிருபர்கள் கேட்கிறார்கள்,...அந்தப்பெண்ணின் உடலை திருப்பிப்பார்த்தபோது பின்பக்கம் மட்டும் முழுமையாக எரிந்திருந்தது...முன்பக்கம் எந்த பாதிப்பும் இல்லை... தானே தீ வைத்துக்கொண்டால் உடம்பு முழுக்க தீக்காயங்கள் இருக்கும்... பின்பக்கம் மட்டும் எரிந்திருப்பதால் கொலைசெய்து , அதன்பின்பு தீ வைத்தது உறுதியானது என்றார் எஸ்.பி...

கைது செய்ததோடு மட்டுமல்லாமல் , அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தான் ரயில்வே ஐ.ஜி யாக இருந்தபோதும் , தானாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி , கூண்டேறி சாட்சியம் அளித்தார்... அந்த கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது...

அவர்தான் பொன். மாணிக்கவேல் ஐ.பி.எஸ்...

'பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல!' என்ற டயலாக் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்குப் பொருந்தும்! தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் எஸ்.பி-யாக இருந்தபோது, இவரது அதிரடிகளுக்கு அளவே இல்லை. இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல அதிகாரிகள் இடமாற்றம் வாங்கி ஓடியது உண்டு , . இதில் ஓமலூர் டி.எஸ்.பி மணிரத்தினம் ரொம்பவே நொந்து போய் வீட்டை விட்டு ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைமறைவாகக் கண்ணாமூச்சி காட்டிய கதை உங்களுக்கு நினைவிருக்கலாம்...

இவரது அதிரடியான ஆக் ஷன் எல்லாம் போலீஸ் அதிகாரிகளுக்குத்தான்... ஆதரவு இல்லாத பொது மக்களுக்கோ இவர் எப்போதுமே கைகொடுக்கும் செல்லம் இந்த பொன்.மாணிக்கவேல்...
சென்னை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தபோது, கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த இரண்டுகாவலர்களை, தெருவில் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து செமத்தியாக மொத்தி எடுத்துப் பரபரப்பூட்டியவர் பொன்.மாணிக்கவேல். அவரது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஆனால் காவல்துறையினர் அவருக்கு எதிரிகளாகமாறினர்.
இதனால் செங்கல்பட்டு கிழக்கிலிருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டார் பொன். மாணிக்கவேல். அங்கும் அவரது அதிரடியான ஆக்ஸன் தொடர்ந்ததால், கள்ளச்சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர்பீதியடைந்தனர். .

இந்தசம்பவத்திற்குப் பிறகு கோவைக்கு மாற்றப்பட்டார் பொன்.மாணிக்கவேல்.கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் பிரியாத சமயம் அது... ரூரல் எஸ்.பியாக பதவியேற்றார்... திருப்பூர் சட்டம் ஒழுங்கின் பொற்காலம் அது...காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கும் மக்களை உட்காரவைத்தே பேசவேண்டும் என்று உத்தரவிட்டார்...எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும் நாற்காலிகள் போடப்பட்டன...தன் தொலைபேசி எண்ணை பேப்பரில் வெளியிட்டு பொதுமக்கள் எந்நேரமும் தன்னை அழைக்கலாம் என்று தெரிவித்தார்...எப்போது பார்த்தாலும் மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ரோந்துப்பணியிலேயே இருப்பார்... கோவை புறநகர் மாவட்ட‌த்தில் குற்றச்சம்பவங்கள் மிக குறைவாக நடந்த காலம் அது...திருப்பூரில் சிக்னலில் நிற்கும் காவலர்கள் முழு யூனிபார்மில் [ கையுறை , ரிப்ளெக்டர்கள் உட்பட..] நிற்பதை முதலும் , கடைசியுமாக நான் பார்த்தது அப்போதுதான்...

நல்லது நடந்தால்தான் ஊழல்வாதிகளுக்கு பொறுக்காதே...? அவருக்கு சக காவல்துறையினர் ரூபத்தில் பிரச்சினை உருவானது. பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகளைக்கண்டு அரண்டு போன கோவை சக அதிகாரிகள் அவருக்கு எதிராக மேலிடத்தில் புகார் மேல் புகாராக அனுப்பிவந்தனர். இதனால் பொன்.மாணிக்கவேலை சற்று ஆறப் போடும் விதமாக, அவரைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் தள்ளியது தமிழக அரசு... பின்னர் மதுவிலக்குப்பிரிவில் பணியமர்த்தப்பட்டார்... மிக விரைவில் அங்கிருந்தும் மாற்றப்பட்டு தற்போது ரயில்வே பாதுகாப்புப்பிரிவின் ஐ.ஜியாக இருக்கிறார்...

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவின் கூடுதல் ஐ. ஜியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இவர் , பலகாலமாக ஹிந்து சமய அறநிலயத்துறை என்ற பெயரில் செயல்படும் சிலைதிருடும் கும்பலை அம்பலப்படுத்தியுள்ளார்... எத்தனை லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள தமிழக கலைச்செல்வங்கள் கொள்ளை போயுள்ளன என்பதுஇவர் அந்தப்பதவிக்கு வந்தபின்பே தெரியவந்துள்ளது...

இவரைப்போன்ற நேர்மையும் திறமையும் உள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டால் இந்த மாநிலத்துக்கே நல்லது...ஆனால் கழகங்களுக்குத்தான் நேர்மை , திறமை என்றாலே அலர்ஜி ஆச்சே? எனவே கூடிய விரைவில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவில் இருந்தும் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்...

எது எப்படியாயினும் தமிழகத்தில் பலகாலமாக அரசியல்வாதிகள் - அதிகாரிகள் இடையேயான கள்ளக்கூட்டணியையும் , அதனால் கொள்ளைபோன விலைமதிப்பற்ற செல்வங்கள் பற்றிய விபரங்களையும் வெளிக்கொண்டுவந்துள்ளார்...

வணங்குகிறோம் ஐயா... தாங்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

#Pon #Manickkavel #பொன். #மாணிக்கவேல் ஐ.பி.எஸ்...

 

Saturday, March 17, 2018

Tuesday, January 9, 2018

தமிழக காவல்துறை முகநூல் பக்க முகவரி:


 தமிழக காவல்துறை முகநூல் பக்க முகவரி:


என்றென்றும் மக்கள் சேவையில் தமிழக காவல்துறை!!
தமிழக மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழக காவல்துறைக்கென்று அதிகாரப்பபூர்வமான முகநூல் பக்கம் துவங்கப்பட்டுள்ளது.
இதில் மாநகர¸ மாவட்ட வாரியான காவல்துறைகள் மற்றும் சிறப்புப் பிரிவுகள் ஆகியவற்றின் பிரத்யேக செய்திகள் மற்றும் மக்களுக்கான காவல்துறையின் அறிவிப்புகள் என அனைத்தையும் இப்பக்கத்தின் மூலம் பெறலாம்..
தனிநபர் புகார் மனுக்களை யாரிடம் கொடுப்பது ?என்ற தகவலைப் பெறலாம்..பொதுப்பிரச்சனைகள...் குறித்த புகார்களை Inbox ல்அளிக்கும் பட்சத்தில் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நண்பர்கள் இந்த சேவையை நன்கு பயன்படுத்தி கொள்ளவும்..அதிகளவில் பகிரவும்..
தமிழக காவல்துறை முகநூல் பக்க முகவரி: 

fb.com/tnpoliceofficial

அகில இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக நம் கோயமுத்தூர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையம் தேர்வுசெய்யப்பட்டதைப் பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம்!!

செந்தில் குமார்  காவல் துறை.