Thursday, June 16, 2011

நேர்மையான D.S.P. (KKM)


பெயர்;முத்துசாமி

பதவி;டி.எஸ்.பி (தற்போது ஓய்வு பெற்ற ADSP)
பணி புரிந்த ஊர்;பழனி,கோவை
வருடம்-1985-90

அதிரடி என்ன..?

சம்பவம்;1;

சாராயம் காய்ச்சுபவர்கள்,பிக்பாக்கெட்,ரவுடிகள் போன்றோரை கைது செய்தவுடன் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் இவர் போடுவதில்லை.அடித்துக்கொண்டே இருப்பார்....நேரம் கிடைக்கும் போதெல்லாம் லாக்கப்பில் வைத்து உதைப்பார்.இது ஒரு வாரம் வரை தொடரும் ..அதன்பின் அவர்களை விட்டுவிடுவார்...அதன் பின் அவர்கள் அந்த தொழிலையே நினைத்து பார்க்க மாட்டார்கள்..அப்படி ஒரு அடி.


சம்பவம்;2;
இரவில் கும்பலாக சீட்டு விளையாடுபவர்களை பார்த்தால் ரோந்து போகும் இவர் ஜீப்பை நிறுத்தி..என்னப்பா செய்றீங்க..?என்பார்...சார் தூக்கம் வரலை..அதான் சீட்டு விளையாடுறோம் என்பார்கள்...அப்படியா எனக்கும் தூக்கம் வரலை..ஜீபுல ஏறுங்க..அப்படியே சிறுவாணி அணை வரை போவோம் என்பார்...வண்டியில் அவர்களை ஏற்றிக்கொண்டு...15 கிலோ மீட்டர் சென்றதும்..கிலோ மீட்டருக்கு ஒரு ஆளாக இறக்கி விடுவார்..இப்படியே நடந்து வாங்கடா...பொழுது போகும் என்பார்...

சம்பவம்;3;

பழைய மில்கள் முதலாளிகளை மிரட்டி,பெரிய பணக்கார மில் முதலாளிகள் கையெழுத்து வாங்கி அடிமாட்டு விலைக்கு மில்லை தன் பெயருக்கு மாற்றும் வேலைகள் கோவை,பழனி பகுதிகளில் அதிகம் நடந்தன....பெரிய பிரபல முதலாளியாக இருந்தாலும் ,பிக்பாக்கெட்டாக இருந்தாலும் வழக்கு போடமாட்டேன்...லாக்கப்பில் வைத்து ஒரு வாரம் உதைத்து அடித்து தோலை உறித்து அனுப்புவேன்..வேறு யாராவது பணத்துக்கு பல் இளிக்கும் போலீஸ்காரன் வந்தால் உங்கள் வேலையை காட்டுங்கள் என்று பகிரங்கமாக இவர் எச்சரித்ததால்,பல,மோசமான முதலாளிகள்,பிரபல பணக்காரர்கள் கொங்கு மண்டலத்தில் நடுங்கி கொண்டிருந்தார்கள்...

சம்பவம் 4;

இரவு 11 மணிக்கு இரண்டு பெண்கள் மோசமான ஏரியாவில் நடந்து போய் கொண்டிருக்க,,என்னம்மா இந்த நேரத்துல யாரு நீங்க..என கேட்க..பக்கத்து ஹவுசிங் உணிட்ல இருக்கோம்...படத்துக்கு போயிட்டு வர்றோம் சார் என்றிருக்கிறார்கள்..அப்படியா இந்த டார்ச்லைட்டை எடுத்துகிட்டு போங்க..என்றிருக்கிறார்..காலையில் அவர்களின் கணவன்மார்கள் டார்ச்லைட்டுடன் வந்து நன்றி சொல்ல,இரண்டு மணிநேரம் அடி பின்னிவிட்டு,பொம்பளைங்களை படத்து தனியா அனுப்பிட்டு நீங்க..எங்கடா..கூத்தடிக்க போனீங்க..அவங்க..செயிஉனையோ..கற்பையோ பறிகொடுத்தா நாங்க ஜீப்பை எடுத்துகிட்டு...எவனை தேடுறது என பின்னி எடுத்திருக்கிறார்..

சம்பவம்;5;

மார்க்கெட்டில் காய்கறி வாங்க..அவர் மனைவி...ஜீப்பை எடுத்துக்கொண்டு வர,அதை கண்டதும் தன் புல்லட்டில் போய் டிரைவரிடம் இந்த புல்லட்டை ஸ்டேசனுக்கு எடுத்துகிட்டு போ...நான் மேடத்தை வீட்ல விட்டுடறேன் என சொல்லியிருக்கிறார்...டிரைவர் போனதும்,இவர் ஜீப்பை எடுத்துக்கொண்டு ரோந்துக்கு போய்விட்டார்..அவர் மனைவி..காய்கறி கூடையுடன் டவுன்பஸ் ஏறி சென்றிருக்கிறார்.

என்ன இந்த சம்பவம் எல்லாம் ஏதோ..படத்துல வர்ற மாதிரி இருக்கேன்னு பார்க்கறீங்களா..இவர் கதையைத்தான் சாமி படமாக எடுத்தார் இயக்குனர் ஹரி.
----------------------------------------------------------------------(தொடரும்)
"நல்ல நேரம்" வலைப்பதிவுக்கு நன்றி.

இந்தியன் தாத்தா!

Tuesday, June 14, 2011

வெண்டும் இன்னொரு விடுதலை.இன்று, இந்தியா ஒரு சுதந்திர நாடு, ‘பரந்து விரிந்து கிடந்த எங்கள் சாம்ராஜ்யத்தில், சூரியன் அஸ்தமிப்பதே இல்லை’ என, சூளுரைத்த பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து, நம் நாட்டை மீட்டெடுக்க நடந்தது சுதந்திரப்போர். 200 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அப்போராட்டத்தில், எத்தனை வன்முறைகள். அடக்கு முறைகள், வேதனைகள்.

கோடிக்கணக்கான தேசபக்கதர்களின் வளமிகு வாழ்வு, தொழில், கல்வி, சொத்து, சொந்த பந்தங்கள், மணவாழ்க்கை, உடல்நலம், உடல் உறுப்புகள் என, இழப்பு ஏற்பட்டதோடு, நேசித்த மண்ணிற்காக இழக்கப்பட்ட இன்னுயிர்களும் பல்லாயிரம்.

‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம்;’ என மனமுருகிப் பாடினார் பாரதியார்.
இத்தனை தியாகங்களையும் காணிக்கையாக்கி, காந்தியின் ஒப்பற்ற தலைமையில் பெற்றெடுத்த நம் சுதந்திர தேசத்தின் அன்றைய நிலை, ‘மன்னன் எவ்வழியோ, அவ்வழி குடிமக்கள்’ எனும் வாக்கின் படி, ராஜாஜி, சர்தார் வல்லவாய் படேல், காமராஜர், நேரு, சி.சுப்ரமணியம் போன்ற உத்தம தேச பக்தர்கள், ஆட்சிப்பொருப்பில் இருந்தனர்.

நாடு பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களை அடைந்து, உன்னத நிலையில் இருந்தது. அனால் இன்று? மீண்டும் கண்ணீர் தான்.  வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற, நம் இந்தியத்தாய்த் திருநாடு, ஊளல் கொள்ளையர்களிடம் இன்று அடிமைப்பட்டு, சிக்கிச் சீரழிந்து, சித்திரவதைப்பட்டு, சிதிலமடைந்து கொண்டிருக்கிறது.

கணக்கிட முடியாக் காடுகள், கனிம வழங்கள், கடல் பகுதி செல்வங்கள், மண், மண்ணுக்கடியில் மலையென மடிந்து கிடக்கும் மாபெரும் தாது பொக்கிஷங்கள், ஆறுகள், ஆற்றுப்படுகைகளில் மண்டிக் கிடக்கும் மணல் மலைகள், நிலத்தடிநீர் என, அத்தனையும் நம் கண்முன்னால், அன்றாடம் இறவு, பகலாக பகிரங்கமாகக் கொள்ளை அடிக்கப்படுகின்றன, வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.

அமோகமாக நடந்து வரும் இந்த அக்கிரமங்கள் எதையும், இதுவரை ஆட்சியில் அமர்த்தப்பட்ட, எந்த அரசியல் கட்சியும் தடுத்து நிறுத்தவில்லை.

‘ஸ்பெக்ட்ரம், எஸ் பேண்டு’ போன்ற விலைமதிப்பற்ற, விஞ்ஞான சாதனங்கள் அத்தனையும், நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் மற்றும் நம் நாட்டின் மாபெரும் முதலாளிகளின் விற்பனைப் பொருட்களாகி விட்டன.

நாட்டின் நிர்வாகம் நாசமாகிக் கொண்டிருக்கிறது. மாதம் தவராமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு ஊழியர்களில், 90 சதவீதத்திற்கு மேல், தங்கள் கடமைகளில் முறை தவறி, அதர்ம அரசியல் வாதிகளின் அடிமைகளாகி, ஆதாயம் தேடும் அவலத்திற்கு அளாகிவிட்டனர்.

நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படும் அரசியல் வாதிகளில், ஆங்காங்கே சில விதிவிலக்குகள் தவிர, அனேகமாய் எல்லாருமே, முழுக்க, முழுக்க சுயநலக்காரர்கள் தான். தன் குடும்பம், மனைவிகள், துணவிகள், பிள்ளை குட்டிகள், பேரன், பேத்திகள், உடன் பிறப்புக்கள், உடன் பிறவாததுகள் என, அவர்களுக்காகவே அல்லும் பகலும் உழைக்கின்றனர்.

பல லட்சம் கோடி அளவிலான பதுக்கல் பணத்தைப் பற்றித் தகவல் கேட்டு, பல காலம் மன்றாடியும், இன்று வரை எந்த அரசும், மசிந்து கொடுக்க வில்லை.  பதவியேற்ற, 100 நாட்களில், பதுக்கல் பணம் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்து விடுவதாக, ஓட்டளித்த நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் கொடுத்த இன்றைய அரசு, இப்போது அதை வெளியிட மறுக்கிறது.

காரணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கு வைக்கப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி, இன்றைய ஆட்சியாளர்களின் முக்கியமான சிலருக்கும் மற்றும் அவர்களுடைய தோழமை தொழிலதிபர்களுக்கும் சொந்தமானமு என்பது, ஓட்டளித்து ஏமாந்த மக்களின் யூகம்.

மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசியல் வாதிகள், ஆயிரத்திற்கும் குறைவான மாபெரும் தொழிலதிபர்களின் கைப்பாவையாகிவிட்டனர். தங்களில் யார் யாருக்கு அமைச்சர் பதவிகள் என்பதில், இந்தியாவின் முன்னோடி கூட்டுக் குழு மக்களைச் சார்ந்த சில சிங்காரிகளை நேசித்தும், யாசித்தும் பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவது, நம் நாட்டின் பரிதாப நிலை.

‘பேய் அரசு செய்தால், பிணத்தின்னும் சாத்திரங்கள்’ என சொன்னார் பாரதி. ஆட்சியாளர்களாலும், அவர்களின் ஆசி பெற்றவர்களாலும், அன்றாடம் நடத்தப்படும், மேற்கண்ட அபரிமிதக் கொள்ளைகளால், இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.

ஒட்டுமொத்த நாட்டின் நிர்வாகம், சீர்செய்ய முடியாத அளவிற்கு சிதைந்து விட்டது. உண்மையில் உழைக்கும் பெரும்பான்மை மக்கள், உருக்குலைந்து விட்டனர்.

ஊரைக் கொள்ளை அடிக்கும் உன்மந்தர்கள்,உலகப் பணக்காரர் களாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த அவலங்களையெல்லாம், தட்டிக் கேட்க வேண்டிய நீதித்துறையும், மெல்ல, மெல்ல களங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நீதித்துறையில் இன்னும் நீடித்திருக்கும், சில நெஞ்சுரமிக்க நீதி வழுவா உத்தம சத்திய சீலர்களால், நீதிதேவன் இன்னும் நிலை குலையவில்லை

உதாரணம்,சுப்ரீம் கோர்ட் மட்டும் இல்லையேல் உலக மகா மோசடியான ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு, ஆழ்கடலில் அமுக்கப்பட்டு, அழிக்கப்பட்டிருக்கும். இன்று சிறைக்குள் இருக்கும், இந்தாஇயவின் ஈடு இணையற்ற வரிமோசடிப் பேர்வழி அசன் அலி கான், சுதந்திரமாகப் பறந்து கொண்டிருப்பான். சரித்திரம் காணா, சத்யம் மோசடி சத்தமின்றி முடிந்திருக்கும்.

இத்தனை அவலங்களுக்கும் ஒரே காரணம் , ஊளல் அதாவது, லஞ்சம், அதிகார துஸ்பிரயோகம், அக்கிரமச் சொத்து சேர்ப்பு.

ஊளல், சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். அதைச் செய்பவன் ஒரு கிரிமினல் குற்றவாளி, அவன் அரசு ஊழியன் ஆனாலும் சரி, அரசியல்வாதியானாலும் சரி… கூசாமல் சொன்னால், அவன் ஒரு கிரிமினல். திருடியவனை, திருடியவுடனே திருடன் என்று தான் சொல்கிறோம். தீர்ப்புக்காக காத்திருப்பதில்லை.

நாட்டின் நிர்வாகம், 90 சதவிகிதத்திற்கும் மேலான கிருமினல்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த ஜனத்தொகியில், 5 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள். இது தான் இன்றைய யதார்த்த நிலை.

இந்நிலை நீடித்தால், கொள்ளையர்களுக்கு அடிமைப் பட்டு விட்ட இந்தியா, தேசப் பற்றற்ற ஊழல் அரசியல் வாதிகளால் அன்னியர்களுக்கு விற்கப்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை. இந்திய மண்ணில் எங்கோ ஒரு மூலையில், ஒரு தேவதை போல் உதயம் ஆகி, ஊழலை ஒழிக்க அறைகூவல் விடுக்கும் அற்புத தேசபக்தர் அன்னா ஹசாரேவுடைய அகிம்சைப் படையில் அணி திரள்வோம்.

அவருடைய சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிராக, சண்டாள, சதிகார, நயவஞ்சக அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப் படும் அநியாயத் தடைகள் அத்தனையும் தகர்தெறிவோம். அவருடைய ஊழலை எதிர்க்கும்  இந்திய அமைப்பின் கீழ் ஒருங்கிணைவோம்.

வரவிருக்கும் லோக்பால் சட்டத்தில், ஊழல் குற்றம் புறிந்து பெற்ற தாயினும் மேலான, பிறந்த தாய்நாட்டைச் சூறையாடி, சுடுகாடாக்கிக் கொண்டிருக்கும் அராஜக அரசியல்வாதிகளுக்கும், அவர்களுக்கு அடியாட்களாகி, அவர்களுடைய பகல் கொள்ளையில் பங்காற்றிப் பங்கு பெறும் அரசு அலுவலர்களுக்கும், மரண தண்டனை வழங்கும் சட்டப் பிரிவை சேர்க்க, மற்றாடி வேண்டிடுவோம்.

இது, ஊழல் அரக்கனிடமிருந்து தாய் நாட்டை மீட்கும், இரண்டாவது சுதந்திரப்போர்.


(தொடரும்)
Wednesday, June 1, 2011

கல்வி உதவித் தொகை.

          ஶ்ரீவிஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை, கோவை.
                     முக்கிய அறிவிப்பு.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட மாணவ, மாணவியர்க்கு;

  1. 2010-2011-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கீழே குறிப்பிட்டுள்ள மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு +2 டிப்ளமோ கல்வியை தொடர ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.
  2. 2010-2011-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கீழே குறிப்பிட்டுள்ள மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தொழிற்கல்வி பயில ரூ.25,000 மற்றும் கலைக் கல்லூரியில் பயில ரூ.12,500 உதவித் தொகை வழங்கப்படும்.
  3. 2010-2011-ம் கல்வியாண்டில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து அனைத்து செமஸ்டர்களிலும் 90% க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தொழில் கல்லூரியில் சேரும் (Lateral Entry) மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்.
                                  10-ம் வகுப்பு    12-ம் வகுப்பு
அரசுப்பள்ளி -----------------------------------------------400 / 500       960 – 1200
அரசு உதவி பெறும் பள்ளி----------------------450 /  500     1080 – 1200
மெட்ரிக் பள்ளி -----------------------------------------475 /  500     1140 – 1200
மாற்றுத்திறனாளிகள்(அனைத்துப்பள்ளிகள் 375/500     900 – 1200

  1. 10-ம் வகுப்பு பயின்று ஊக்கத்தொகை பெறுவோர், கூட்ட நெரிசலைத் தவர்ப்பதற்காக, மதிப்பெண் வாரியாக மாணவர்கள் நேரில் வரவேண்டிய தேதியை வரும்  ஜூன் மாதம் 20-ம் தேதியன்று வெளியாகும் முன்னணி தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் அறிவிக்கப்படும். விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டுள்ள விபரப்படி அந்தந்த தேதிகளில் மட்டும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
  2. +2 முடித்து தொழில் கல்வியில் (Professionlal Course) சேரும் மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) முடித்து கல்லூரி ஒதிக்கீடு (Allotment Letter) படிவத்துடன் குறிப்பில் கண்டுள்ள ஆவணங்களைச் சேர்த்து நேரில் வந்து விண்ணப்பிக்கவும்.
  3. +2 முடித்து கலைக் கல்லூரியில் (Non-Professional Course) சேரும் மாண வர்கள் கல்லூரியில் சேர்ந்த்தற்கான அத்தாட்சி (Admission Letter)      உடன் குறிப்பில் கண்டுள்ள ஆவணங்களை சேர்த்து ஜூன் மாதம் 10-ம் தேதிக்குப்பிறகு நேரில் வந்து விண்ணப்பிக்கவும்.
குறிப்பு: தேவையான ஆவணங்கள்: மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, குடும்ப அட்டை, மற்றும் ஜாதி சான்றிதழ்  (நகல்கள்) நகலுடன் சரிபார்க்க அசல் ஆவணங்கள் கொண்டு வரவும்.

இங்ஙனம்:  ஓ.ஆறுமுகசாமி, நிறுவனர்,
ஶ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை
107-A செங்குப்தா வீதி, ராம் நகர், கோயம்புத்தூர்.

போன்:  0422-2236633, 2236644.

நன்றி பொது நல ஆர்வலர் திரு.வெள்ளிங்கிரி –D.S.P ஓய்வு.