Monday, March 8, 2021

தமிழக காவல் துறையில் மாற்றான் தாயின் பிள்ளைகள்.

தமிழக காவல் துறையில் மாற்றான் தாயின் பிள்ளைகள்.

 

தமிழக காவல் துறை மூன்று கேட்டகிரியாக இருப்பது உங்களைக்குத் தெறிந்திருக்கும். இதில் கேட்டகிரி இரண்டுதான் (Armed Reserve Police) இந்த கேட்டகிரி இரண்டுக்கு அந்தந்த மாவட்டித்தின் காவல் காண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ளது.  அவர்களுக்கென்று DIG, IG, ADGP,  மற்றும் DGP  கள் கிடையாது. இந்தக் காவலர்களின் அமிகாரிகளின் குடும்ப நலன் விசாரிக்க இது போன்ற மேல் அதிகாரிகள் இவர்களுக்கென்று தனியாகக்கிடையாது. ஆனால் இங்குள்ள காவலர்கள்தான்  மேல் அதிகாரிகளின் வீட்டு வேலை செய்ய ஆர்டர்லியாக உள்ளார்கள். இந்தப் பிரிவின் அலுவல்களோ மிகவும் கடினமானது.  அவை கைதிகள் வழிக்காவல், பணப்பறிமாற்றப்பாதுகாப்பு அலுவல். மந்திரிகளின் எஸ்கார்ட் அலுவல், எல்லாவிதமான காப்பு அலுவல்கள், மாவட்டித்தில் ஏற்படும் அனைத்துப் பொதுக்கூட்ட்ப் பாதுகாப்பு அலுவல். சட்டவிரோதமான கூட்டத்தைக் கலைக்கும் அலுவல். மேலும் மற்ற மாவட்டித்தில் தேவைப்படும் பாதுகாவல் அலுவலாகவும் அனுப்ப ப்படுவராகள்.

 

இந்தப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சொந்த த்தாயின் பிள்ளைகள் போன்று பாவிக்காமல் மாற்றான் தாயின்  பிள்ளைகள் போன்று பாவிக்கிறார்கள். கேட்டகிரி ஒன்றில் யாராவது தவறு செய்தால் அவர்களை கேட்டகிரி இரண்டிற்கு மாற்றப்படுகிறார்கள். இது அவர்களுக்கு  ஒரு சிறை தண்டனை போலும். 

 

தமிழக காவல் துறை வெள்ளைக்காரன் காலத்திலிருந்து மாற்றங்கள் எதுவம் செய்யப்படவில்லை ஏதாவுது ஒரு அரசு முன் வந்து  காவல் துறையை அடிப்படையிலிருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும். காவலர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி அளித்து எங்கு வேண்டுமானாலும் மாற்றப்படவேண்டும். மாறுதலுக்கு ஒரு கால அவகாசம் அளிக்கலாம். எல்லோரொக்கும் ஒரே தலைவர் அமைய வேண்டும். காவல் துறைக்கு ஒரு மறுமலர்ச்சி வருமா காத்திருப்போம்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment