Thursday, December 31, 2015

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!


 
தமிழ்நாடு காவல்துறை முத்திறை.

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு! 

தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்!

இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் ஒரு சில நூலகங்களிலும் இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்!

தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது! இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று!
தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது!
டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது!
இது மட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது. வடக்கு மத்தி மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது!
ஒவ்வொரு மண்டலமும் ஜஜியின் தலைமையில் இயங்கி வருகிறது!
இது தவிர சென்னை சென்னை புறநகர் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது!
தமிழகத்தில் 30 காவல் மாவட்டங்கள் உள்ளன! காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இவை இயங்கி வருகின்றன!
சிவில் போலீஸ் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுதப் போலீஸாரும் உள்ளனர்!
மாநிலத்தில் ஒரு ரயில்வே சரகம் உள்பட மொத்தம் 12 காவல் சரகங்கள் உள்ளன! ஒவ்வொரு சரகத்திலும் 2 முதல் 3 மாவட்டங்கள் உள்ளன!
சில சரகங்களில் இவை கூடுதலாக இருக்கும். துமிழக காவல்துறையின் பணியை எளிமையாகவும் சிறப்பாக்கும் வகையிலும் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சீரிய முறையில் அவை செயல்பட்டு வருகின்றன!
அவை ஆயுதப் போலீஸ் அல்லது தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் ஹோம் கார்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு சிவில் சப்ளைஸ் சிஐடி கடலோர பாதுகாப்புப் படை சிபிசிஐடி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு தமிழ்நாடு கமாண்டோ படை மதுவிலக்கு தடுப்புப்பிரிவு ரயில்வே போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு சிறப்பு காவல் சிஐடி தொழில்நுட்பப் பிரிவு தமிழக காவல்துறையின் வரலாறு தமிழக காவல்துறையின் வரலாறு 1659ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது!
அந்த சுவாரஸ்யமான தொகுப்பு இதோ உங்கள் முன் :

1659 - மதராஸ்பட்டத்தின் பின்னர் மெட்ராஸ் - இப்போது சென்னை, பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளயைர் அரசு நியமித்தது!
இது தான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல்!
1770ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே போலீஸ் வாரியத்தை அமைத்தார்!
இதன் மூலம் பொது அமைதி பொது சுகாதாரம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது!
பின்னர் 1771ம் ஆண்டு சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா? மோசடிகள் நடக்கிறதா? என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்டரேட்டன் கொத்வால் என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார்!
1780ல் - காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) பதவி உருவாக்கப்பட்டது!
மார்க்கெட்களை கண்காணித்து பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது!
1782 -  தவறுகளைத் தடுக்கவும் மோசடிகளை தடுக்கவும் சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்கினார்!
1791 – கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது! வுpயாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் லஞ்சம் வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது!
அதற்குப் பதிலாக பாலிகர் என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது!
1806 – 3 போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முதலாவது எஸ்.பியாக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ் மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார்!
1829 – 1832 - மெட்ராஸ் சிட்டி அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம் திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், பெயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது!
1834 - முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும் டி.எஸ.பி.யாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர்!
1856 - போலீஸ் சட்டம் 12 ஆக திருத்தப்பட்டது! அதன்படி மெட்ராஸ் சிட்டியின் முதல் காவல் ஆணையராக ஜே.சி.போட்லர்சன் நியமிக்கப்பட்டார்!
இதனை தொடர்ந்து
1859 – ல் நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கம் இங்கு தான் ஆரம்பித்தது என குறிப்பிட்டு சொல்லலாம்!
அதனை தொடர்ந்து போலீஸ் சட்டம் 24 கொண்டு வரப்பட்டது!
1906ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போலீஸ் ஆணையத்திற்கு இதுதான் முன்னோடியாகும்!
1865 ல் போலீஸ் (டிஜிபி)  தலைமையிடம் அமைந்துள்ள கட்டிடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது!
.1874 - இந்த கட்டத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ.20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது! மேலும் ரூ.10 ஆயிரம் செலவழித்து பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன!
1884 - மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை  என்று சொல்லப்படும் வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டதைத் தொடர்;ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டது!
1895 - ல் கை விரல் ரேகைப்பிரிவு தொடங்கப்பட்டது!
1902 - மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது!
வடக்கு சரகம் துணை ஆணையரின் தலைமையிலும் தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன!
1906 - குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது! பாவ்செட் என்பவர் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார்!
1909 – கிங்க்ஸ் என்ற போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது!
1919 – மெட்ராஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு நியமிக்கப்பட்டார்! இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான் என்பது பெருமைக்குரியதாகும்!
பி.பி. தாமஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார். 1928 – சிஐடி போலீஸ் பிரிவு சிறப்பு பிரிவு (எஸ்.பி.சிஐடி) மற்றும் குற்றப்பிரிவு (சிபிசிஐடி) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது!
1929 - மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப்பிரிவு சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது! 1935 பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன!
1946 – போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது!
1947 சென்னையைச் சேர்ந்த அதிகாரி சஞ்சீவி டெல்லி (ஐடீ) ஐபி யின் இயக்குநராக பொறுப்பேற்றார்! இப்பதவியில் அமர்ந்த முதலாவது இந்தியர் இவர்தான்!
1951 - மெட்ராஸ் மோப்ப நாய்ப்படை உருவாக்கப்பட்டது! சுதந்திரத்திற்குப் பின்னர் மோப்ப நாய்கள் படை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையான மாநிலமாக தமிழகம் விளங்க இந்தப் படைதான் முன்னோடியாக அமைந்தது!
1956 – போலீஸ் ரேடியோ அலவலகம் உருவாக்கப்பட்டது!
1959 – தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது!
1960 - போலீஸ் ஆய்வு அமையம் உருவாக்கப்பட்டது!
.1961 மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது!
மாநில தடயவியல் அய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது!
.1963 - ல் மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழ அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது !
ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது!
1971 - போலீஸ் கம்ப்யூட்ட்ர் பிரிவு உருவாக்கப்பட்டது! காவல்துறையில் கம்ப்யூட்டர்மயமாக்கலை தொடஙகிய முதல் மாநிலம் தமிழகம் தான்!
கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது!
தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்து 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும் பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!
1976 – ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது! சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது!
.1979 - தமிழக கால்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது. 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!
1976 – தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்!
1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது!
1984 – சிஐடி வனப்பரிவு உருவாக்கப்பட்டது!
1989 - தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது! காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படடது!
1991 - காவல்துறை சிறைத்துறை தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது!
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது!
1992 - சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது! தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது! படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது!
1993 - சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது!
1994 – கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது!
1997- மதக் கலவரங்களைத் தடுத்த விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது!
2001 - புதிய நூற்றாண்டில் தமிழக காவல்துறை 91,331 போலீஸார் 11 சரகங்கள் 30 போலீஸ் மாவட்டங்கள், 2 இரயில்வே மாவட்டங்கள் 6 ஆணையரகங்கள், 189 துணை கோட்டங்கள், 287 சரக்கிள்கள், 1276 காவல் நிலையங்களுடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. 2002 - காவலர் குறை தீர்ப்பு தினம் தொடங்கப்பட்டது!
சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தலைமையிடமாக கொண்டு ஜஜி தலைமையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. 2003 நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க ஒரு நடமாடும் காவல் நிலையம் உட்பட 80 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடங்கப்பட்டன!
2004 - பெண் போலீஸாரைக் கொண்ட தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது! இந்தியாவிலேயே இதுதான் அனைத்து மகளிர் போலீஸ் பட்டாலியன் என பெயர் பெற்றதாகும்!
2005 - ல் செங்கை கிழக்கு காவல் மாவட்டம். சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது. 2006 – ஆசியாவிலேயே மிகப் பெரியதும். நவீனமானதுமான புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது!
2007 – சென்னை காவல்துறை 150 ஆண்டுகளைத் தொட்டது.
இப்படி எத்தனையோ காலகட்டங்களைத் தாண்டி நமது தமிழக காவல்துறை இன்று சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகின்றது!
எத்தனை ஆட்சிகள் மாறினாலும் எள்ளளவு குறையாது பணிகளை மேற்கொண்டு வருகிறது!
 

நன்றி-
போலீஸ் நியூஸ் பிளஸ்

Monday, August 24, 2015

பெண் எஸ்.ஐ. பதவி உயர்வு?



35 ஆண்டாக இரண்டே பதவி உயர்வு பெண் எஸ்.ஐ.., க்கள் முறையீடு.

'எம்.ஜி.ஆர்' போலீஸ், என்று முத்திரை குத்தப்பட்ட நாங்கள், 35 ஆண்டுகளாக, இரண்டே, இரண்டு பதவி உயர்வு மட்டும் பெற்று, மனஉளைச்சலுடன் பணியாற்றிகிறோம்' என, பெண் எஸ்.ஐ.., க்கள், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

பெண் போலீசார் சார்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;

தமிழகம் முழுவதும் கடந்த, 1981 ம் ஆண்டு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் (கிரேடு -1) பணிக்கான ஆள் தேர்வு நடந்தது. இதில், 700 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்தோம். இதன்பின்,  15 ஆண்டுகள் எங்களுக்கு தலைம் காவலராக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் தேர்வு செய்யப்பட்டதால், நாங்கள், 'எம்.ஜி.ஆர். போலீசார்' என, முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டோம். எங்களுக்குப் பின்னால், போலீஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  இது குறித்து கடந்த, 1996 ல், தி.மு.க., அரசிடம் எடுத்துரைத்து, தலைமைக்கவலர் பதவி உயர்வு பெற்றோம். அதன் பின் 2004 ன் ஆண்டு வரை தலைமைக் காவலராகவே பணியாற்றி வந்தோம்.

இதுகுறித்து அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் முறையிடப்பட்டது. இதை பரிசீலித்த அரசு, 1981 ம் ஆண்டு கிரேட் 1 போலீசாக தேர்வு வழங்கி உத்தரவிட்டது. ஆனால், அதன்பின், இன்று வரை இன்ஸ்பெகடராக பதவி உயர்வு கிடைக்கவில்லை.

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, எவ்வளவு முயன்றும், எங்களைக்கு பதவிஉயர்வு  அளிக்கப்படவில்லை. எங்களைக்கு பின்னால் போலீஸ் பணியில் சேர்ந்தவர்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று விட்டனர். கடந்த, 35 ஆண்டுகளாகப் பணியாற்றியும், எங்களைக்கு இதுவரை இரண்டே இரண்டு பதவி உயர்வுகளே வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1981 ல் முதல் நிலை காவலராக பணியில் சேர்ந்த நாங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1986 ல் தலைமைக்கவலராகவும், 1996 ல் தலமைக்காவலராகவும், 1996 ல் எஸ்.ஐ,களாவும், 2006 ல் இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். 2016 ம் ஆண்டு உதவி ஆணையர் என, பதவி உயர்வு பெறவிருக்கும் பட்டியலில் இடம் பெற்றரிக்க வேண்டும்.

இன்னும் ஓரிரு மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டில் பணி ஓய்வு பெற உள்ளோம். எங்கள் சேவையை அர்த்தமுள்ளதாக்கி, முதல்வர்  உடனடியாக எங்களை இன்ஸ்பெக்டராக பணி உயர்வு அளிக்க வேண்டும்.

இவ்வறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர் நாள் 24-08-2015.















































Wednesday, June 17, 2015

உலக யோகா தின விழா.


வாழ்க வையகம்-----------------------------------------------வாழ்க வளமுடன்.


கோவை மாநகர மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள்
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கம்.
இணைந்து நடத்தும்.

உலக யோகா தின விழா.

அழைப்பிதழ்

நாள் - 21-06-2015 ஞாயிறு மாலை 4-00 மணி

இடம் - காவலர் பயிற்சி மைதானம்(PRS-AR GROUND) ) கோவை.

சிறப்பு வருந்தினர் - திரு.A.K. விசுவநாதன் IPS    அவர்கள்
கோவை மாநகர காவல் ஆணையர்

தலைமை - அருள்நிதி  S.  செல்வராஜ் அவர்கள்
தலைவர், கோவை மனவளக்கலைமன்ற அறக்கட்டளை

முன்னிலை - அருள்நிதி R.  வெள்ளிங்கிரி(DSP,CBI, RETD.) அவர்கள்
தலைவர், முன்னாள காவல்துறை அதிகாரிகள் சங்கம்

திரு.  T.P.  ராமச்சந்திரன் அவர்கள்
நிறுவனர்,சங்கர கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்வி நிறுவனங்கள்., கோவை.

அன்புடையீர்,
நமது பாரதப்பிரதமர் அவர்கள், சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில், தீவிரவாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்றைய மனித மனதை அமைதி நிலை கொண்டுவர யோகா (தியானம்) ஒன்றே வழி எனவும், அந்த யோகக்கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியத் திருநாடு எனவும் எடுத்துக் கூறி உலக யோகா தினம் கொண்டாட  கோரிக்கை வைத்தார். ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 177 நாடுகள் நமது பிரதமரின் கோரிக்கைக்கு ஒப்புதல் தந்து, ஐ.நா.சபை வருடா வருடம் ஜூன் 21 ஆம் நாளை உலக யோகா தினமாக அறிவித்தது.

அவ்வினிய நாளினை கோவை மாநகரில் கொண்டாட தங்களுக்கும் யோகம் கிடைத்திட அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம்

முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கம்
கோவை மாநகர மனவளக்கலை மன்ற அறக்கட்டைகள்.










Wednesday, January 28, 2015

காவல் பணி-சமுதாயப்பணியா?

முகநாலில் வினோத் மதுரை மண்ணின் மைந்தன் எழுதியது.


காவல்துறையை இழிவுபடுத்துவதில் பலருக்கும் ஏகமகிழ்ச்சியென்பதும்,காவல்துறை தாக்கப்படும் போதெல்லாம் பலரும் ஆனந்தக்கூத்தாடுகின்றார்கள் என்பதும் பல பதிவுகளின் மூலம் புலப்படுகின்றது.அத்தகைய அன்பர்களுக்கான பதில் பதிவு இது.
இதே சமுதாயத்தில் இருந்து தானே காவல்துறைக்கும் மனிதர்கள் தேர்வாகின்றார்கள்.....

பிறகு எப்படி காவல்துறையில் மட்டும் 100./. உத்தமர்களை எதிர் பார்க்கின்றீர்கள்?

எல்லையில் இருந்துகூட போராடிவிடலாம்,
ஆனால் அரசியல்,சாதி,மதம்,சீர்கெட்ட சமுதாயம்,பணபலம்,வன்முறை இப்படி பலதரப்பட்ட படைகளுக்கு முன்னே வெறும் லத்தியை மட்டும் வைத்துக்கொண்டு போராடும் காவலனை உங்களுக்கு தெரியுமா?
எடுத்த உடனே என்கவுண்டர் தான் என்று திரைப்படங்களை பார்த்து மனதில் பிம்பம் பதித்துக்கொண்ட உங்களுக்கு கலவரத்திலும்,சாதி மோதல்களிலும் மண்டை உடைந்த,கை,கால் முறிந்த,உயிரையே பறிகொடுத்த காவலர்களை தெரியுமா?

நேர்மை தவற ஆயிரம் (அநி)ஞாயமான காரணங்கள் இருந்தும்...
வாங்கிய சம்பளத்தில் பாதியை தன்னுடைய சாப்பாட்டிற்கும்,போக்குவரத்திற்குமே செலவழித்துவிடுவதால், வருமையில் வாழும் காவலர் குடும்பங்களை தெரியுமா?

எல்லா இடங்களிலும் உங்கள் குறைகள் மறைக்கப்படவும்,உங்கள் வேலை அவசரமாய் முடியவும் கையூட்டு வழங்க தயங்காதவர்கள் நீங்கள்
உங்களில் எத்தனை பேர்,முழுமையான ஆவணங்களுடன் பயணித்து அபராதம் செலுத்தியிருப்பீர்கள்,

100 ரூ அபராதம் என்றால் சார் சார் 50 வாங்கிட்டு விட்ருங்க சார் என்ற பேரம் பேசாதவர்கள் எத்தனை பேர்.

கட்சிஊர்வலம்,கோவில் கொடை,அரசியல் கூட்டம்,சாதிதலைவர் பிறந்தநாள்,மறைந்தநாள்,இப்படி தெருமுனை கூட்டம் வரை அத்தனைக்கும் பாதுகாப்பு வேணும்ங்றீங்களே

ஒரே ஒருநாள் காவல்துறை முழுவதும் இயங்காமல் இருந்தால் எப்படி இருக்கும் ? தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே இடுகாடாகிப்போகும் .
100 காவலரில் 10 க்கும் குறைவான விகிதத்தில் தான் நீங்கள் வெறுக்கும் வகையிலான காவலர்கள் இருப்பார்கள் ,மொத்த காவலர்களையும் இழிவு படுத்த எந்த........,க்கும் தகுதியில்லை.

எந்த துறையில் இருந்து ஓய்வு பெற்றாலும் மீத வாழ்க்கையை சுகமாய் வாழ இயலும்

ஆனால் காவல்துறையில் பணி நிறைவு பெறும் போது கிடைக்கும் பணம் அதுவரை உடலைபேணாமல் விட்டதால் உண்டான நோய்களுக்கு சிகிச்சை பெறக்கூட போதாது,

வேலை,வேலை என்று அலைவதால் குடும்பத்தினர்,உறவினரிடையே பாசம் காட்ட இயலாமல்,மன இறுக்கத்தில்,வேலைபளுவில் மாரடைப்பில் இறக்கும் காவலர்களின் விகிதம் தெரியுமா?

விடிய,விடிய பணிமுடித்தும்,ஓய்வின்றி மறு நாள் காலையும் பணி தொடரும் படி உத்தரவு வர .....

தூங்கிவிழுந்தபடி வெயிலிலும்,மழையிலும் பணியை தொடரும் எங்கள் காவலர்கள் இல்லையென்றால் உங்கள் கோவணத்தை கூட உங்களால் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Unlike ·
·
(தொடரும்.)

Wednesday, January 21, 2015

டி.எஸ்.பி. வெள்ளத்துறை.




டி.எஸ்.பி. வெள்ளத்துறை.


என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை :-

துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிட அதிவேகமாக ஆக்சன் எடுக்கும் ஆக்சன் கிங்!!!

தன்னுடைய துப்பாக்கி சத்ததாலே தமிழகத்தை தன்பக்கம் திரும்பி பார்த்த ஒரு தைரியமான, எவருக்கும் பயப்படாத நேர்மையான அதிகாரி, 

வீரமும், கோபமும் விளைந்து நிற்கும் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் பிறந்தவர்தான் இந்த வல்லவர்!!! தமிழக காவல்துறையில் அதி உயர் கல்வித் தகுதியுடையவர் இவர்.

எம்.ஏ. (சரித்திரம்) எம்.ஏ. (போலீஸ் நிர்வாகம்) என டபுள் எம்.ஏ.வுடன், பி.ஹெச்டி வரை முடித்த ஒரே தமிழக போலீஸ் அதிகாரி இவர்தான்

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபிறகு ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபரர் கலை கல்லூரியில் ப்ரோபோசராக பணியில் சேர்ந்தார், பின் மூன்று வருடம் பணியை தொடர்ந்து 1994ஆம் ஆண்டு எஸ்.ஐ தேர்வுக்கு சென்றார்,

அதன் காரணமாக 1997ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார், பின்னர் 1999 ஆம் ஆண்டு புதுகோட்டை, கீரனூர்-இல் உதவி ஆய்வாளராக பணியை தொடர்ந்தார்,

என்னுடைய முதல் என்கவுண்டர், திருச்சி லால்குடி கோர்ட் மாஜிதிரட் முன்னாடி கூண்டில் இருந்தவரை கழுத்தை அறுத்து கொன்றான் ரவுடியான கோசிஜன், அவன்தான் இவருடைய துப்பாக்கிக்கு கிடைத்த முதல் களை!!!

அப்போதும் அவருக்கு எந்த ஒரு பதட்டமும் இருந்தது இல்லை, அவருடைய பி.பி பரிசோதனை செய்த மருத்துவர் நார்மலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்தார், இப்பவும் அப்படியேதான் இருக்கிறார், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை ரோல் மாடலாக கொண்டிருப்பார்கள், அதுபோல இவருக்கும் ரோல் மாடல் ஆப்பிசர் உண்டு, அவர்கள் யாரென்றால் "திரிபாதி சார் மற்றும் வால்டர் தேவாரம்" அவர்கள்..... இவர்களை போல தன்னுடைய பாதையை அமைக்கவேண்டும் என்றே லட்சியம் கொண்டவர்,

இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், நெல்லுக்கு பக்கத்தில் களை வளரத்தான் செய்யும், அதை சமையம் பார்த்து புடுங்கி எறியவேண்டும், இல்லையென்றால் அது நெல்லையும் நாசமாக்கி விடும், வயலையும் நாசமாக்கி விடும், அது போலதான் இவருடைய ஆக்சனும், 1000 பேர் சந்தோசமாக இருக்கிறார்கள், அந்த 1000 பேரின் சந்தோசத்தை ஒருவன் கெடுக்கிறான் என்றால் அவனை கொள்வதில் தவறு இல்லை என்பதே இவரது எண்ணம்!!!

ரவுடிசத்தை ஒழிப்பது என்ற விஷயத்தில் முனைப்பான அதிகாரி என்று பெயரெடுத்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தன்னுடைய கண்பார்வையிலேயே கண்ணீர் விடவைத்தவர், தமிழகத்தில் ரவுடிகளை வேர் அறுப்பதே இவருடைய லட்சியம்... எவருக்கும் பதறாமல் ஆழ்மனதில் தவறு என்று தெரிந்ததை தைரியமாக தட்டிகேட்கும் தளபதி!!!

மக்கள் பயபடமால் நடமாட ஆதரவாக இருக்கும் கண்ணியமிக்க கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய.திரு.வெள்ளத்துரை அவர்களுடைய பணிசிறக்க, பணி தொடர மனதார வாழ்த்துகிறோம்.... சல்யூட்....
 — withMuthu RajPrema PreminiNeha Ashwin and 19 others. (தொடரும்)

Friday, January 16, 2015

காவல் துறையினருக்கு தமிழக முதல்வரின் வீர விருதுகள்.

Gallantry medal for slain head constable
Head constable G. Kanagaraj, who lost his life in July last while attempting to nab an individual involved in sand smuggling, has been chosen for the Tamil Nadu Chief Minister’s Police Medal for Gallantry.
An official release said the head constable was about to apprehend Suresh in Uriyurkuppam, near Thakkolam of Vellore district, who was seeking to take away sand illegally from the Kosthalaiyar river bed. The legal heir of the deceased head constable would be given a cash prize of Rs. five lakh.
Besides, 1,500 police and other uniformed services personnel, belonging to the rank of police constable, head constables and equivalent ranks would be given the Tamil Nadu Chief Minister’s Constabulary Medals for Pongal.
One hundred and twenty Fire and Rescue Services personnel in the ranks of Leading Fireman, Driver Mechanic, Fireman Drivers and Firemen and 60 Prison Service personnel in the rank of Grade-I Warder would be given the Tamil Nadu Chief Minister’s Medals.
Medal allowance
The monthly medal allowance to the recipients of the medals would be Rs.200/- with effect from February 1, irrespective of their rank. The medals would be presented to the recipients at their respective district headquarters.
In addition, the Tamil Nadu Chief Minister’s Medal for excellence in technical and specialised services would be given to five personnel — two each from the Police Radio Branch and the Dog Squad and one police photographer. The officers in the rank of constable and head constable would get Rs.3,000; those in the levels of sub-inspectors and inspectors – Rs. 4,000 and deputy superintendents of police – Rs. 6,000. The medal would be presented by Chief Minister O. Panneerselvam later, the release said.
Unlike ·
·    தொடரும்.