Wednesday, January 28, 2015

காவல் பணி-சமுதாயப்பணியா?

முகநாலில் வினோத் மதுரை மண்ணின் மைந்தன் எழுதியது.


காவல்துறையை இழிவுபடுத்துவதில் பலருக்கும் ஏகமகிழ்ச்சியென்பதும்,காவல்துறை தாக்கப்படும் போதெல்லாம் பலரும் ஆனந்தக்கூத்தாடுகின்றார்கள் என்பதும் பல பதிவுகளின் மூலம் புலப்படுகின்றது.அத்தகைய அன்பர்களுக்கான பதில் பதிவு இது.
இதே சமுதாயத்தில் இருந்து தானே காவல்துறைக்கும் மனிதர்கள் தேர்வாகின்றார்கள்.....

பிறகு எப்படி காவல்துறையில் மட்டும் 100./. உத்தமர்களை எதிர் பார்க்கின்றீர்கள்?

எல்லையில் இருந்துகூட போராடிவிடலாம்,
ஆனால் அரசியல்,சாதி,மதம்,சீர்கெட்ட சமுதாயம்,பணபலம்,வன்முறை இப்படி பலதரப்பட்ட படைகளுக்கு முன்னே வெறும் லத்தியை மட்டும் வைத்துக்கொண்டு போராடும் காவலனை உங்களுக்கு தெரியுமா?
எடுத்த உடனே என்கவுண்டர் தான் என்று திரைப்படங்களை பார்த்து மனதில் பிம்பம் பதித்துக்கொண்ட உங்களுக்கு கலவரத்திலும்,சாதி மோதல்களிலும் மண்டை உடைந்த,கை,கால் முறிந்த,உயிரையே பறிகொடுத்த காவலர்களை தெரியுமா?

நேர்மை தவற ஆயிரம் (அநி)ஞாயமான காரணங்கள் இருந்தும்...
வாங்கிய சம்பளத்தில் பாதியை தன்னுடைய சாப்பாட்டிற்கும்,போக்குவரத்திற்குமே செலவழித்துவிடுவதால், வருமையில் வாழும் காவலர் குடும்பங்களை தெரியுமா?

எல்லா இடங்களிலும் உங்கள் குறைகள் மறைக்கப்படவும்,உங்கள் வேலை அவசரமாய் முடியவும் கையூட்டு வழங்க தயங்காதவர்கள் நீங்கள்
உங்களில் எத்தனை பேர்,முழுமையான ஆவணங்களுடன் பயணித்து அபராதம் செலுத்தியிருப்பீர்கள்,

100 ரூ அபராதம் என்றால் சார் சார் 50 வாங்கிட்டு விட்ருங்க சார் என்ற பேரம் பேசாதவர்கள் எத்தனை பேர்.

கட்சிஊர்வலம்,கோவில் கொடை,அரசியல் கூட்டம்,சாதிதலைவர் பிறந்தநாள்,மறைந்தநாள்,இப்படி தெருமுனை கூட்டம் வரை அத்தனைக்கும் பாதுகாப்பு வேணும்ங்றீங்களே

ஒரே ஒருநாள் காவல்துறை முழுவதும் இயங்காமல் இருந்தால் எப்படி இருக்கும் ? தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே இடுகாடாகிப்போகும் .
100 காவலரில் 10 க்கும் குறைவான விகிதத்தில் தான் நீங்கள் வெறுக்கும் வகையிலான காவலர்கள் இருப்பார்கள் ,மொத்த காவலர்களையும் இழிவு படுத்த எந்த........,க்கும் தகுதியில்லை.

எந்த துறையில் இருந்து ஓய்வு பெற்றாலும் மீத வாழ்க்கையை சுகமாய் வாழ இயலும்

ஆனால் காவல்துறையில் பணி நிறைவு பெறும் போது கிடைக்கும் பணம் அதுவரை உடலைபேணாமல் விட்டதால் உண்டான நோய்களுக்கு சிகிச்சை பெறக்கூட போதாது,

வேலை,வேலை என்று அலைவதால் குடும்பத்தினர்,உறவினரிடையே பாசம் காட்ட இயலாமல்,மன இறுக்கத்தில்,வேலைபளுவில் மாரடைப்பில் இறக்கும் காவலர்களின் விகிதம் தெரியுமா?

விடிய,விடிய பணிமுடித்தும்,ஓய்வின்றி மறு நாள் காலையும் பணி தொடரும் படி உத்தரவு வர .....

தூங்கிவிழுந்தபடி வெயிலிலும்,மழையிலும் பணியை தொடரும் எங்கள் காவலர்கள் இல்லையென்றால் உங்கள் கோவணத்தை கூட உங்களால் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Unlike ·
·
(தொடரும்.)

No comments:

Post a Comment