35 ஆண்டாக இரண்டே பதவி உயர்வு பெண் எஸ்.ஐ.., க்கள் முறையீடு.
'எம்.ஜி.ஆர்' போலீஸ், என்று முத்திரை குத்தப்பட்ட நாங்கள், 35 ஆண்டுகளாக, இரண்டே, இரண்டு பதவி உயர்வு மட்டும் பெற்று, மனஉளைச்சலுடன் பணியாற்றிகிறோம்' என, பெண் எஸ்.ஐ.., க்கள், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
பெண் போலீசார் சார்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;
தமிழகம் முழுவதும் கடந்த, 1981 ம் ஆண்டு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் (கிரேடு -1) பணிக்கான ஆள் தேர்வு நடந்தது. இதில், 700 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்தோம். இதன்பின், 15 ஆண்டுகள் எங்களுக்கு தலைம் காவலராக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் தேர்வு செய்யப்பட்டதால், நாங்கள், 'எம்.ஜி.ஆர். போலீசார்' என, முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டோம். எங்களுக்குப் பின்னால், போலீஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இது குறித்து கடந்த, 1996 ல், தி.மு.க., அரசிடம் எடுத்துரைத்து, தலைமைக்கவலர் பதவி உயர்வு பெற்றோம். அதன் பின் 2004 ன் ஆண்டு வரை தலைமைக் காவலராகவே பணியாற்றி வந்தோம்.
இதுகுறித்து அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் முறையிடப்பட்டது. இதை பரிசீலித்த அரசு, 1981 ம் ஆண்டு கிரேட் 1 போலீசாக தேர்வு வழங்கி உத்தரவிட்டது. ஆனால், அதன்பின், இன்று வரை இன்ஸ்பெகடராக பதவி உயர்வு கிடைக்கவில்லை.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, எவ்வளவு முயன்றும், எங்களைக்கு பதவிஉயர்வு அளிக்கப்படவில்லை. எங்களைக்கு பின்னால் போலீஸ் பணியில் சேர்ந்தவர்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று விட்டனர். கடந்த, 35 ஆண்டுகளாகப் பணியாற்றியும், எங்களைக்கு இதுவரை இரண்டே இரண்டு பதவி உயர்வுகளே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1981 ல் முதல் நிலை காவலராக பணியில் சேர்ந்த நாங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1986 ல் தலைமைக்கவலராகவும், 1996 ல் தலமைக்காவலராகவும், 1996 ல் எஸ்.ஐ,களாவும், 2006 ல் இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். 2016 ம் ஆண்டு உதவி ஆணையர் என, பதவி உயர்வு பெறவிருக்கும் பட்டியலில் இடம் பெற்றரிக்க வேண்டும்.
இன்னும் ஓரிரு மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டில் பணி ஓய்வு பெற உள்ளோம். எங்கள் சேவையை அர்த்தமுள்ளதாக்கி, முதல்வர் உடனடியாக எங்களை இன்ஸ்பெக்டராக பணி உயர்வு அளிக்க வேண்டும்.
இவ்வறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர் நாள் 24-08-2015.
No comments:
Post a Comment