Wednesday, November 12, 2014

"வால்டர் தேவாரம்"





வால்டர் தேவாரம்
தேவாரம் "வால்டர் தேவாரம்" இவர் பெயரை கேட்டாலே உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றுகிறது, அந்த அளவுக்கு மிக நேர்மையான அதிகாரி.....
முறுக்கு மீசையுடன், உரமேறிய உடலுடன் சிக்கென, போலீஸாரும் பொறாமைப்படும் சுறுசுறுப்புடன் டி.ஜி.பி.யாக இருந்தவர் வால்டேர் தேவாரம்.
கேரள மாநிலம் மூணாறில் பிறந்தவர் தேவாரம், சுறுசுறுப்பாக பணியாற்றும் குணம் கொண்டவர். "வெட்டு ஒன்று,துண்டு ஒன்று" என்று பேசுபவர். எடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடிக்காமல் விடாதவர். அகில இந்திய அளவில் துப்பாக்கிச் சுடுதலில் பல முறை விருதுகள், பரிசுகள் பெற்றவர்.
தேவாரம் குறித்து காவல்துறையில் பல கதைகள் கூறப்படுவதுண்டு. அத்தனைகதையும் அவரது வீர, தீரத்தைப் புகழ்வதாகும்.
ஸ்ட்ரிக்டான அதிகாரி என்ற பெயர் பெற்றவர்; துணிச்சல் மிக்கவர்;நேர்மையானவரும் கூட. வழக்கமாக திருடர்களுக்குத்தான் போலீஸாரைப் பார்த்தால் பயம் வரும். ஆனால்தேவாரத்தைப் பற்றி நினைத்தால் போலீஸாருக்கே பயம் ஏற்படுமாம். அத்தனை கெடுபிடியானவர் தேவாரம்.
தமிழக ஒலிம்பிக் சங்க தலைவராகவும் தேர்ந்தெடுக்க பட்டவர், மற்றும் பல விருதுகளை பெற்றவர், அதுமட்டும் இல்லாமல் அணைத்து மாணவ, மாணவியர், இளைஞர்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர், அனைவரையும் விளையாட்டின் மூலம் ஊக்குவிப்பதே இவரது சிறந்த குணங்களுள் ஒன்று....
இவரை போல அனைத்து அதிகாரிகளும் இளைஞர்கள்-களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எனது ஆசை,

No comments:

Post a Comment