Friday, September 26, 2014

சைலேந்திர பாபு அவர்களின் வாழ்க்கை





சரித்திர நாயகன் மதிப்பிற்குரிய.சைலேந்திர பாபு அவர்களின் வாழ்க்கை சரித்திரம் :

1962 ஜூன் 5-ம் நாள் பிறந்த டாக்டர் சைலேந்திர பாபு 1987 ல் தமிழ்நாடு பணிநிலை பிரிவின் இந்திய காவல் ஆட்சியராக(IPS) தன பணியை தொடந்தார். அவர் 2012 வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் கூடுதல் இயக்குனர ஜெனெரலாக பணியாற்றினார் . சென்னை பல்கலைகழகத்தில் குற்றவியலில் முனைவர் பட்டம் மட்டுமல்லாது பெருவேட்கயுடைய வாசகர் . துவண்டு கிடப்பவரின் மனதை ஊக்கமூட்டும் பேசாளரும் சீரிய உடற்பயிற்சி ஆய்வாளரும் கூட..
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தன பள்ளிப்படிப்ப முடித்து மதுரையில் அமைந்துள்ள Agricultural College and Research Institute ல் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். கோயம்புத்தூர் விவசாய பலகலைகழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள்தொகை கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றார் . சென்னை பல்கலைகழகத்தின் மூலம் அவருடைய "Missing Children" ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார் . 2013 -ம்ம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முது நிலைப்பட்டம் பெற்றார் . தற்போது கணினி அறிவியல் மற்றும் சைபர் கிரிம் விசாரணை பிரிவு என்றும் தொடர்கிறார்.
உடற்பயிற்சியை தீவிரமாக கடைபிடித்து உடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் உடல்நலதகுதி எனும் தமிழ் நூலை எழுதி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்போருக்கு விருந்தாக இந்த நூலை தந்துள்ளார். வீர தீர விளையாட்டுச்செயல்கலான நீச்சல், தடகளம், துப்பாகிசுடுதல் , சைகிளிங் போன்றவற்றில் அதி தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காக தேசிய போலீஸ் அகாடமி மூலம் "RD சிங்" கோப்பையை பெற்றுள்ளார் .டிசெம்பர் 2004 ல் பாங்காக்கில் நடைபெற்ற Asian Masters Athletic Championships ல் மட்டுமல்லாது இவரது பங்களிப்பு இன்னும் பல 10k ஓட்டம் போன்ற சென்னை மாராதான் மற்றும் கோவை மராத்தான் போட்டியிலும் தொடர்ந்துள்ளது . 2014 ஆரோவிள்ளே மராத்தான் -ன் அரை மாராதான் நிகழ்விற்காக 26 கடற்படை வீரர்கள் அடங்கிய குழிவிற்கு தலைமை இவரே,
பிப்ரூவரி 2008 ம் ஆண்டில் இந்தியன் கடற்கரையோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு உறுப்பினர்களுடன் இணைந்து கணியகுமரியிலிருந்து சென்னைக்கு 890 கி. மீ சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்து பேரணியிலும் கலந்து கொண்டார். 10 நாட்களாக நடந்த அந்த பேரணியில் கடலோர காவலர்களின் செயல்பாடு மற்றும்கடலோர மக்களின் மத்தியில் காவற்படயைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு செயலாற்றினார் .
துப்பாக்கி சுடுவதில் அனல் வீசும் ஆர்வம் கொண்ட சைலேந்திர பாபு அவர்கள் காவல்துறை மற்றும் பொதுத்துறை சார்ந்த துப்பாக்கிச்சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
IPS ஆக பணியில் சேர்ந்த சையிலேந்திர பாபு அவர்கள் ஹைதராபாத் தேசிய காவல் அகாடமி மூலம் பயிற்சி பெற்றார் . ASP ஆக கோபிசெட்டி பாளயம் , சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பணியாற்றி SP ஆக செங்கல்பட்டு, சிவகங்கை, கூடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பணியாற்றினார், பின்னர் DC ஆக அடையாரிலும் பின் DIG ஆக விழுப்புரம் சரகத்திலும் இணை கமிஷனராக சென்னையிலும் பணியாற்றினார், கரூர் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றுவதற்கு முன்பு டிக் ஆக திருச்சியிலும் பின் சென்னை வடக்கு மணடலத்தின் IG ஆக பணியாற்றுவதற்கு முன் முன்பு போலீஸ் கமிஷனராக கோவையிலும் பணியாற்றினார்,
ஏப்ரல் 2014 ல் இணை இயக்குனர் போலீசாக (Assistant Director of General Police) பதவி உயர்வு பெற்ற சையிலேந்திர பாபு அவர்கல் தற்போது தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படைக்குழுவின் ADGP ஆக பணியில் உள்ளார் .
கமிஷனராக கோவையில் பணியாற்றிய போது Lead India 2020 உடன் இணைந்து பல்வேறு பள்ளிகளில் கணினி கல்வி திட்டத்தை அறிமுகபடுத்தினார் , அத்திட்டத்தின் கீழ் உள்ளூர் காவல் நிலயங்கள் பள்ளிகளை தத்தேடுதுக்க் கொண்டது. சயிலேந்திர பாபு அவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு இலவச கராத்தே முகாம்களை ஏற்படுத்தி கொடுத்தார். மகளிர் கல்லூரிகளில் கராத்தே முகாம்களை ஆரம்பித்து கொடுத்தார்.
அவர் பெற்ற பதவி உயர்வுகள் :
1,Additional Superintendent of Police – ASP October 1989
2,Superintendent of Police – SP January 1992
3,Deputy Inspector General – DIG March 2001
4,Inspector General – IG December 20, 2006
5,Additional Director General of Police – ADGP-April 23, 2012
விருதுகள் மற்றும் மரியாதைகள்:
Chief minister's medal for outstanding devotion to duty 2000
Chief minister's police medal for Gallantry , jan,2001
Prime minister's medal for life saving in 2001
Special task Force bravery medal in 2004
President's Medal for Meritorious Service in 2005
Blue Cross of India 2007 Award
The Best Alumnus Award July 25, 2008
President's police Medal for Distinguished Service Jan 26, 2013
இன்னும் பல இவருடைய தகவல்கள் விட்டிருக்கலாம் மன்னித்துவிடுங்கள், ஏனென்றால் கடல் அளவு தண்ணீரை குடத்தில் பிடிக்க முடியுமா? இவரை புகழை பாட்டால் பாடி உணர்த்த கூட புலவர் கிடையாது, இவர் புகழை எழுத்தால் எழுத ஏடுகளும் போதாது...
இவருடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....!

நன்றி முத்துராஜ்
--------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, September 20, 2014

விஜயகுமார் ஐ.பி.எஸ் ஆனது எப்படி?






நான் விஜயகுமார் ஐ.பி.எஸ் ஆனது எப்படி?

''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே போதும் என செட்டில் ஆகிவிடும் மன நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்தப் புள்ளியிலேயே சுதாரிக்க வேண்டும். அதில் இருந்து உடனடியாக மீளாவிட்டால், வாழ்க்கைப் பயணம் நாம் ஆசைப்பட்ட திசையில் இருக்காது!'' என்று அனுபவம் பகிர்கிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் விடாப்பிடி உறுதி முயற்சியுடன் 'ஐ.பி.எஸ்.’ பட்டம் தொட்டவர்.
''தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பா செல்லையா வி.ஏ.ஓ. என் அம்மா ராஜாத்தி, பள்ளி ஆசிரியை. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில்தான் படித்தேன். ஒரே மகனான என்னை டாக்டர் இல்லேன்னா, இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க அவங்களுக்கு ஆசை. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆயிட்டேன். சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி மனசுல தோணிட்டே இருக்கும். அது போக, போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவ சாயம்னு எங்க பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம்தான். போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு தோணும். 'மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி’ என்ற என் இரண்டு ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும்தான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன்.
கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை எதுவும் அமையலை. சென்னையில் தங்கி சிவில் சர்வீஸ் பரீட்சைகளுக்குப் படிக்கிற அளவுக்கு வசதியும் இல்லை. ஏதாவது வேலையில் சேர்ந்து சின்னதா சம்பாதிச்சுட்டே படிக்கலாம்னு முடிவு பண்ணி, ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்தேன். 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு படிக்க முடியலை. நாலு மாசத்திலேயே வேலையை விட்டுட்டேன். ஏதாவது
ஓர் அரசு வேலையில் சேர்ந்துட்டு, படிக்கலாம்னு முடிவு பண்ணேன். 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிச்சேன். ஏனோதானோன்னுதான் படிச்சேன். தேர்வில் தோல்வி. அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந் தேன். அந்தத் தேர்வுக்கு ஆறு மாசம் தீவிரமாப் படிச்சேன். 2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தேன். அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதினேன். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வுன்னு இரண்டு வருட நடை முறை முடிந்து 2002-ல் ரிசல்ட் வந்தது. தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி., ஆனேன்.
தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். அது எனது கடைசி ஏழாவது முயற்சி. வெற்றி!
ஆனால், தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும் அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் வார்த்தையில் அடங்காது. டி.எஸ்.பி-யாக நான் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். காரணம், சிவில் சர்வீசஸ் தேர்வு.
'இன்டர்வியூ போகணும்... மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்... ஒரு மாசம் லீவு வேணும்’னு கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் பரிசாகக் கிடைக்கும். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் முதல் இரண்டு முயற்சிகளிலேயே யாருக்கும் வெற்றி நிச்சயம்!
சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் 'ஐ.பி.எஸ்’ என்று மட்டுமே எழுதினேன். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் 0 என்றே குறிப்பிட்டு இருந்தேன். நேர்முகத் தேர்விலும் காவல் துறை பற்றிய கேள்விகள் தான் சுற்றிச் சுழன்றன. 'எப்படிங்க உங்க ளுக்கு நேரம் கிடைச்சது? எப்படிப் படிச் சீங்க’ன்னு நட்பாகத்தான் என்னை எதிர் கொண்டார்கள். சிவில் சர்வீஸில் தேறி ஐ.பி.எஸ்., பணி உறுதியானாலும் டி.எஸ்.பி., பணியில் இருந்து நான் உடனடியாக விலகவில்லை. தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில்தான் பயிற்சிக்குச் சென்றேன். ஒரு வேளை பயிற்சி முடிந்த பிறகு, வேறு மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டால், 'ஐ.பி.எஸ். வேண்டாம்’னு சொல்லிட்டு, தொடர்ந்து தமிழகத்திலேயே டி.எஸ்.பி. ஆகப் பணிபுரியத்தான் ஆசை.
நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும்போது தங்குவதற்குச் சிரமமாக இருக்கலாம். புத்தகங்களைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். வீட்டிலும், 'என்னப்பா படிச்சுட்டே இருக்கேன்னு சொல்ற. எப்பதான் பாஸ் பண்ணப்போற?’னு கேட்பார்கள். சில உறவினர்கள் கிண்டல் அடிக்கக்கூடச் செய்வார்கள். எந்தச் சூழலிலும் சோர்ந்துபோகவே கூடாது. நேர்மறை எண்ணம்கொண்டவர்களை மட்டுமே பக்கத்தில் சேருங்கள். வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் ஒரே லட்சியத்தோடு படித்தால் நலம். குரூப்-2, குரூப்-1 என கொஞ்சம் தடம் மாறியதால்தான் என் வெற்றி தள்ளிப்போனது. 'இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்...!

--------------------------------------------------------------------(தொடரும்)

Monday, September 15, 2014

காவல்துறை காலி இடங்கள்.

  




காவல்துறை காலி இடங்கள்.

தமிழகம் முழுவதும் போலீசில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 20 ஆயிரம்
தமிழக போலீசில், ஏ.டி.ஜி.பி., முதல் இரண்டாம் நிலை காவலர் வரை, 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, எஸ்.ஐ., மற்றும் போலீசார் தேர்வு நடக்காததால், காலியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
கட்டாயம் :
தேசிய அளவை விட, தமிழகத்தில், மக்கள் தொகை அடிப்படையிலான போலீசார் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும், குற்றங்கள் எண்ணிக்கை அடிப்படையில், இதை இன்னும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த, ஜூலை நிலவரப்படி, டி.ஜி.பி., முதல், கடை நிலை போலீசார் வரை, 1,20,899 போலீசார் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,00,490 போலீசார் மட்டும் தற்போது பணியில் உள்ளனர்.ஏ.டி.ஜி.பி., முதல், போலீசார் வரை, 20,409 பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றில், அடிப்படையில் உள்ள, தலைமை காவலர், முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் சிறப்பு காவலர்கள் எண்ணிக்கை மட்டும், 15,998; எஸ்.ஐ., பணியிடங்கள், 4,047.
ஓய்வு:
ஆண்டு தோறும், தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஓய்வு பெறுவதால் பணியிடங்கள் காலியானாலும், அவற்றை, நிரப்பும் பணி என்பது, எப்போதாவது மட்டுமே நடக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன் தான், காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை போலீசாருக்கு, பணி மூப்பு அடிப்படையில், அடுத்தடுத்த நிலைக்கு மாற்றப்பட்டனர்.கடந்த, 2012ல், இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்போர் என, 13,320 பேர், தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், தற்போது பணியில் இணைந்துள்ளனர்.
67 அறிவிப்புகள்:
கடந்த ஆண்டு, சட்டசபையில், காவல் துறை மானியக் கோரிக்கை முடிவில், 67 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அதில், 'இனி ஆண்டுதோறும், காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் நிலையில், ஏற்படும் காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை, ஒவ்வொரு ஆண்டும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவித்தார்.அப்போதே, 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்போர், 292, காவலர்கள், 17,138 பேர் என, 19,526 பேர் தேர்வு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.இதன் படி, 2013 - 14ல், 13,294 இரண்டாம் நிலை காவலர்கள், 305 சிறைக் காவலர்கள், 905 தீயணைப்போர் மற்றும் 1,317 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப டிவெடுக்கப்பட்டது.
தேர்வு:
இதற்கான தேர்வுகளை நடத்த, சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிக்கை தயாரித்து, அரசிற்கு அனுப்பியது. ஆனால், இதுவரை ஒப்புதலோ, அதுகுறித்த அரசாணையோ வெளியாகாததால், பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தேர்வாணய இணைய தளத்தில், 'இதுவரை, அரசிடம் இருந்து சாதகமான பதில் ஏதும், ஆணையத்திற்கு வரவில்லை. அரசாணைகள் கிடைக்கப்பட்ட பின், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்; ஆணைகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
எஸ்.ஐ., தேர்வில் கலந்து கொள்வதற்காக, காத்திருப்போர் கூறியதாவது:கடந்த, 2011ல், எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, தாலுகா எஸ்.ஐ., அளவில், 4, 047 மற்றும் சிறப்பு காவல்படையில், 48 மற்றும் ஆயுதப்படையில், 153 காலியிடங்கள் உள்ளன.ஆண்டுதோறும் தேர்வு நடத்தியிருந்தால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கும். முதல்வர் தலையிட்டு, விரைவாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தவிர, டி.எஸ்.பி.,க்கள் நிலையில், 96; இன்ஸ்பெக்டர்கள் நிலையில், 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், டி.எஸ்.பி.,க்கள் பதவி உயர்வு மூலமும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய நேரடி நியமனம் மூலமும் நியமிக்கப்படுகின்றனர்.

-----------------------------------------------------------------------(தொடரும்)

Friday, September 12, 2014

காவல் துறை பதவி வரிசை
























காவல் துறை பதவி வரிசை மற்றும் சீருடை குறியீடுகள்.. இதில் Addl.DGP விடுபட்டுள்ளது, ஆனால் DGP / Addl.DGP ஒரே சீருடை குறியீடு தான்,.SP,DIG, IGP, ADGP, DGP ஆகும். மாநகரங்களில் DCP, JCP, Addl.COP, COP என இருக்கும்.. — with Durai Senthil Kumar and Amar Ips. நன்றி.

---------------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, September 10, 2014

தமிழக காவல்துறையில் நேர்மையான அதிகாரி.




வீ.சித்தண்ணன் B.sc. , M.L., CC & IS, தமிழக காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் கடமை தவறாமல் பணியாற்றி தனக்கென தனித்தடம் பதித்தவர்,
தனக்கென தனி தடம் பதித்தது மட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாழ்வில் சிறப்படைய வேண்டும் என்று மன உறுதியுடன் வாழ்பவர்,
அதன் விளைவாக இவர் எழுதிய படைப்புதான் " காவல் புலன் விசாரணை - பாகம் 1" மற்றும் " காவல் புலன் விசாரணை - பாகம் 2" தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார், இதில் அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது,
அதாவது,
1) 2005, 2008, 2010 & 2013 -ம் ஆண்டுகளின் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியது.
2) 14/11/2012 அன்று அமலுக்கு வந்த “பாலியல் குற்றங்களிலிருந்து
குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 பற்றிய முக்கிய குறிப்புகளைக் கொண்டது.
3) 2012-ஆம் ஆண்டு வரையிலான இந்திய உயர்நீதி மன்றங்கள் மற்றும்
உச்ச நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகளையும் உள்ளடக்கியது.
4) முற்றிலும் இன்றைய நிலைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட, காவல் புலன் விசாரணையைப் பற்றி,
இன்றுவரை தமிழிழ் வெளிவராத அனைத்துத் தரப்பினருக்கும் அத்தியாவசியமான புதிய படைப்பு இது.
5) காவல் அலுவலர்கள், வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள்,
தினந்தோறும் புரட்டிப் பார்த்து, மேம்படுத்திக்கொள்வதை உறுதி செய்யும் உபயோகமான படைப்பு.
6) காவல் அலுவலர்கள், மாநில மற்றும் அகில இந்திய “காவல் பணித்திறன் போட்டிகளில்” கலந்துகொள்ள,
பதவி உயர்வுக்கான முந்தைய பயிற்சி தேர்வுகளில் வெற்றிபெற உதவும் ஒரு உன்னத படைப்பு.
இன்னும் பலபடைப்புகளை உருவாக்க, மாணவ, மாணவர்களின் படிப்பு மட்டும்தான் இந்தியாவை உணர்த்தும் என்பதை தன்னுடைய தாரக மந்திரமாக மனதில் கொண்டுள்ளார்... இவரது வெற்றி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி முத்துராஜ்.

-------------------------------------------------------(தொடரும்)

Tuesday, September 9, 2014

ரம்யா பாரதி I.P.S ஆனது எப்படி?




நான் ரம்யா பாரதி I.P.S ஆனது எப்படி?
''முதலில் உங்கள் இலக்கை முடிவு செய்யுங்கள். ரோல் மாடல்களாக இரண்டு மூன்று பேரை மனதில் வைத்து உழைக்கத் தொடங்குங்கள். தணியாத ஆர்வமும் கடின உழைப்பும் தோல்விப் படியில் கால்வைக்காமல் முதல் முயற்சியிலேயே உங்களை வெற்றிச் சிகரத்தை எட்டவைக்கும்!''- ரம்யா பாரதியின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தன்னம்பிக்கை மினுமினுக்கிறது. 21 வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்ற தமிழகத்தின் இளம் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி. தற்போது ஓசூர் ஏ.எஸ்.பி.
''அப்பா ராமையா ஐ.ஏ.எஸ்., தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தின் தலைவர். அம்மா வள்ளி, சமூக நலத் துறை அதிகாரி. அண்ணன் அருண்பிரசாத், வருமானவரித் துறையில் உதவி ஆணையர். அண்ணி சந்தியா அருண், அண்ணா பல்கலைக்கழக இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, இன்ஃபோசிஸில் பணிபுரிகிறார். இதுதான் என் குடும்பம்.
அப்பா, அம்மா போலவே அரசாங்க உயர் பதவியில் அமர வேண்டும் என்று நானும் அண்ணனும் சின்ன வயதிலேயே முடிவெடுத்தோம். சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராக நிறைய நேரம் தேவைப்படும் என்பதாலேயே, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ. சோஷியாலஜி படித்தேன். 2006-ல் டிகிரி முடித்தபோது எனக்கு 20 வயது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் குறைந்தபட்ச வயது வரம்பு 21. அதனால், ஒரு வருடம் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்காகத் தயாரானேன். 2007 மே மாதம் முதல்நிலை தேர்வு, 2008-ல் முதன்மைத் தேர்வு, தொடர்ந்து நேர்முகத் தேர்வு என முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ்., ஆனேன். அண்ணனுக்கு ஐ.ஆர்.எஸ் கிடைத்தது.
என்னிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். 'பயிற்சி வகுப்புகளுக்குக்கூடப் போகாமல், முதல் முயற்சியிலேயே எப்படித் தேர்வானீர்கள்?’ பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தால்தான் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தேர்ச்சி அடைய முடியும் என்பதெல்லாம்தவறான கற்பிதங்கள். பயிற்சி வகுப்பு பலன்கள் 10 சதவிகிதம்தான். 90 சதவிகித வெற்றிக்கு நமது உழைப்புதான் காரணம்.
நான் பிரபலமான பயிற்சி வகுப்புகள் அனைத் தில் இருந்தும் கேள்வித்தாள், பாடப் புத்தகங்களை வீட்டுக்கே வரவழைத்துப் படித்தேன்.
நான் நேர்முகத் தேர்வு என்று எதிர்கொண்ட முதல் தேர்வே, சிவில் சர்வீஸ் இன்டர்வியூதான். மிகவும் கடினமான நேர்முகத் தேர்வு. ஆனாலும், திருப்திகரமாகப் பதில் அளித் தேன். நிச்சயம் தேர்வாகிவிடுவேன் என்று தெரியும். ஆனால், சொந்த மாநிலத்திலேயே ஐ.பி.எஸ்., கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இத்தனைக்கும் பள்ளியில் நான் சராசரி மாணவிதான். ஆனால், என் குறிக்கோள் என்ன என்பதில் தெளிவாக இருந்தேன். எனது பலம், பலவீனம் தெளிந்து அறிந்து திட்டமிட்டுப் படித்தேன்.
ஒரு நாளில் 18 மணி நேரம் படிப்பேன். மீதமுள்ள நான்கு மணி நேரத்தில்தான் தூக்கம் உள்ளிட்ட மற்ற வேலைகள். படபடப்பு, பரபரப்புக்கு இடம் தரவே இல்லை. 'சூப்பரா படிக்கிறோம்ல’ என்ற பரவச நிலையும் கிடையாது. வெறியோடு படித்தேன். நான் வீட்டில்தான் தங்கி இருக்கிறேன் என்பதையே அக்கம்பக்கத்தினர் மறந்துபோகும் அளவுக்கு ஒரு வருஷம் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்து படித்தேன். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் செல்லும்போது, வீட்டை வெளியில் பூட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். பாடம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறும் சமயம் தவிர, மற்ற நேரங் களில் செல்போனை அணைத்தே வைத்திருப்பேன். சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் தனித் தீவில் இருப்பது போல இருந்தேன். நண்பர்களைப் புறக்கணித்தேன். என் வயதுக்கே உரிய அத்தனை சந்தோஷங்களையும் தியாகம் செய்தேன். என்னைப்போல ஆசை ஆசையாக வேறு யாரேனும் பாடத்தைப் படித்திருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
தேர்வுகளுக்குப் படிக்கத் தொடங்கும் முதல் சில வாரங்கள் எரிச்சலாகவும், மலைப்பாகவும் இருக்கும். ஆனால், அதிலேயே தீவிரமாக நமது மனதைச் செலுத்தும்போது, அது உங்களுக்குப் பிடித்த தனி உலகம் ஆகிவிடும். வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடங்களைப் படிக்கும்போது, நம் நாட்டைப்பற்றி நமக்குத் தெரியாமல் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற உற்சாகம் நம்மைப் பற்றிக் கொள்ளும். தேர்வில் தேறினாலும் தேறாவிட்டாலும்கூட அந்த ஒரு வருடப் படிப்பு நம் வாழ்க்கை முழுமைக்கு மான உரமாக, வரமாக இருக்கும். அடக்கமானஅமைதி நிலைக்குச் செல்வோம்.
நம்மை நாமே முழுவதுமாக அறிந்துகொண்டால்தான் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற முடியும். நேர்முகத் தேர்வு விண்ணப்பத்தில் 'உங்கள் சொந்த ஊர், பிடித்தது, பிடிக்காதது, விளையாட்டு’ என நம்மைப் பற்றிக் கேட்டிருப்பார்கள். நேர்முகத் தேர்வில் நம்மிடம் கேட்கப்படும் கேள்விகள், நாம் குறிப்பிட்ட விஷயங் களைச் சுற்றியே அமைந்திருக்கும். என்னிடம், 'உங்கள் ஊரில் சினிமா நட்சத்திரங்களின் மீது அதிக மோகம் கொண்டுள்ளீர்களே?’ என்று கேட்டார்கள். 'ஆமாங்க, இப்படித்தான் வீணாப்போறாங்க’ என்று பதில் சொல்லிஇருக்கலாம்தான். ஆனால், வருங்காலத்தில் ஒரு அரசை நடத்தும் பொறுப்புக்கு வருபவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கக் கூடாது என்பதால், 'மோகம் உண்மைதான். ஆனால், அதனால் விளைந்துள்ள நன்மைகளும் ஏராளம். தமிழர்கள் எதையும் ரசிப்புத்தன்மையோடு பார்ப்பார்கள்!’ என்றேன். என் பதில் அவர்களுக்குப் பிடித்திருந்தது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு மட்டுமல்ல; வாழ்க்கையின் எந்தத் தேர்விலும் வெற்றிபெற கடின உழைப்பு, ஈடுபாடு, நேர்மறை எண்ணம் ஆகிய மூன்று தோழர்கள் போதும்!''
என்றும் உங்களுடன்
ஆர்.முத்துராஜ்
www.facebook.com/muthurajtsi
-----------------------------------------------------------------(தொடரும்)

Monday, September 1, 2014

பொன் மாணிக்கவேல்.ஐ.பி.எஸ்.


  பொன் மாணிக்கவேல்.ஐ.பி.எஸ்.

எத்தனை பேருக்கு இவரை பற்றியும் இவரது ஆக்ஸன் பற்றியும் தெரியும்? கொஞ்சம் படித்து பாருங்கள் உங்கள் உடம்பே சிலிர்க்கும்.....
போலீஸ்துறையில், "கறார் அதிகாரி' என்று பெயர் பெற்ற பொன் மாணிக்கவேல்.....!!!!!!!
'பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல!' என்ற டயலாக் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்குப் பொருந்தும்! தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் எஸ்.பி-யாக இருந்தபோது, இவரது அதிரடிகளுக்கு அளவே இல்லை. இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல அதிகாரிகள் இடமாற்றம் வாங்கி ஓடியது உண்டு , . இதில் ஓமலூர் டி.எஸ்.பி மணிரத்தினம் ரொம்பவே நொந்து போய் வீட்டை விட்டு ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைமறைவாகக் கண்ணாமூச்சி காட்டிய கதையை ஒருவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இவரது அதிரடியான ஆக்ஸன் எல்லாம் போலீஸ் அதிகாரிகளுக்குத்தான்... ஆதரவு இல்லாத பொது மக்களுக்கோ இவர் எப்போதுமே கைகொடுக்கும் செல்லம் இந்த பொன்.மாணிக்கவேல்,
சென்னை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தபோது, கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த இரண்டுகாவலர்களை, தெருவில் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து செமத்தியாக மொத்தி எடுத்துப் பரபரப்பூட்டியவர் பொன்.மாணிக்கவேல். அவரது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஆனால் காவல்துறையினர் அவருக்கு எதிரிகளாகமாறினர்.
இதனால் செங்கல்பட்டு கிழக்கிலிருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டார் பொன். மாணிக்கவேல். அங்கும் அவரது அதிரடியான ஆக்ஸன் தொடர்ந்ததால், கள்ளச்சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர்பீதியடைந்தனர். .
இந்தசம்பவத்திற்குப் பிறகு கோவைக்கு மாற்றப்பட்டார் பொன்.மாணிக்கவேல். அங்கும் அவருக்கு காவல்துறையினர் ரூபத்தில் பிரச்சினை உருவானது. பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகளைக்கண்டு அரண்டு போன கோவை சக அதிகாரிகள் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மேலிடத்தில் புகார் மேல் புகாராக அனுப்பிவந்தனர். இதனால் பொன்.மாணிக்கவேலை சற்று ஆறப் போடும் விதமாக, அவரைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் தள்ளியது தமிழக அரசு.. மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பொறுப்பு ஏற்கிறார். மதுரைஅமலாக்கப் பிரிவில் பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொன்.மாணிக்கவேலின் வருகையால் இந்த வழக்குகள் சூடுபிடிக்கும், மதுரை வட்டாரத்தில் அணல் பறக்கும் எனஎதிர்பார்க்கலாம்.
இவருக்கு கடந்த சில ஆண்டு காலம் இவருக்கு வனவாசம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுரை பட்டாலியன் கமாண்டன்ட், பழநி பட்டாலியன் கமாண் டன்ட், ரயில்வே டி.ஐ.ஜி. என மக்களோடு நேரடித் தொடர்பு இல்லாத இடங்களில் பணியாற்றி மீண்டும் வந்திருக்கிறார்! கீழ்மட்ட ஊழியர்களிடம் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார், தற்போது அவரை மீண்டும் ஆக்ஷனில் இறக்கியுள்ளது அரசு , பொன்.மாணிக்கவேலின் வருகையால் இந்த வழக்குகள் சூடுபிடிக்கும், இவர் இருக்கும் மாவட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்க படுகிறது,
எனக்கு மிகவும் பிடித்த இவரது வேகம் ,
ஒருமுறை மதிப்பிற்குரிய பொன் மாணிக்கவேல் எஸ்பி"யாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் ஒரு தற்கொலை கேஸ், ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்த செய்திகேட்ட நமது பொன் மாணிக்கவேல் அவர்கள் நேரே ஸ்பாட்டுக்கு போனார்...பிணத்தை பார்த்துவிட்டு மாப்பிளையை வண்டியில் அள்ளி போட்டு கொண்டு காவல் நிலையத்துக்கு வந்துவிட்டார்,
காரணம் :- அது தற்கொலை அல்ல கொலை என்று சொன்னார் . பத்திரிக்கை நிருபர்கள் "அதெப்பிடி சார் அது தற்கொலை இல்லை கொலைன்னு கண்டு பிடிச்சீங்க...?" என்று கேட்டதுக்கு எஸ்பி சொன்னார் "தற்கொலைன்னா உடம்பு முழுவதும் எரிந்து போயிடும், கொலைன்னா ஒருப்பக்கம் மட்டுமே எரிந்து இருக்கும், கொலையாளிகள் எங்களிடம் மாட்ட சில தடயங்களை விடுவார்கள் அல்லவா அதுல இதுவும் ஒன்று" என்று சொல்ல நிருபர்கள் வாயடைத்துப் போனார்கள்!
 
தொடரும்.