சீரழியும்
சி.பி.ஐ.,
உரத்த
சிந்தனை.
-ஆர்.நடராஜன்-
அமெரிக்க
தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.
ஒரு காலத்தில், பலருக்கு உதறல் எடுக்கும் அளவுக்குப் பணியாற்றிய அமைப்பு, சி.பி.ஐ., என்ற ‘சென்ட்றல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’ அரசியலுக்கு அடிமைப்பட்டுப் போன அதை, எதிர்கட்சியனரும், பிரபல பத்திரைக்கையாளர்களும், ‘காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’ என்றே கூறினர். அதுவும் சரியல்ல, ‘ஐ’ எனபதற்கு, இன்வெஸ்டிகேஷன்!’ என்பதற்குப் பதிலாக, ‘இன்ஜஸ்டிஸ்’ (நீதி இல்லாத) என்று சொல்வதே பொருத்தம். இப்போது இதை வேறு வார்த்தைகளில் சொல்லிகிறது உச்சநீதிமன்றம்.
மத்திய
அரசு, அதன் ஒரு துறையான சி.பி.ஐ., க்கும் இதைவிடக் கேவலமான விமர்சனம், இதுவரை வந்ததில்லை.
உச்ச நீதிமன்றம் இப்படிச் சொன்ன மறு நிமிடமே, மன்மோகன்சிங் ராஜநாமா செய்திருக்க
வேண்டும். செய்யவில்லை, அவரது மனசாட்சி, அவரை உறுத்தவில்லை, ஏனென்றால், அவர்
சி.பி.ஐ., யார் மீதும் ஏவி விட வில்லை.
சரி,
அவர் பிரதமர் பதவியில் இருக்கட்டும். சி.பி.ஐ., தலைவராவது கொஞ்சம் வெட்கப்பட்டு,
வேதனைப்பட்டு, ராஜநாமா செய்திருக்கலாம்.
செய்ய வில்லையே…அவரிடம் இழிவுக்கு நாணப்படும் மான உணர்வு இல்லையே? அப்பபடி எந்த
மனிதரையும் சொல்ல முடியாது. அவர் விரும்பினாலும் ராஜினாமா செய்ய முடியாது. விமர்சனத்தை
அடுத்து ராஜினாமா செய்தால், அது உண்மை என்பது தெரிய வந்து விடும். அதனால் ராஜினாமா
செய்யாதீர்கள் என்று, அவருக்குக் கட்டளை வந்திருக்கலாம். யாரிடமிருந்து?
சரி,
சி..பி.ஐ., தலைவருக்கு யார் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்க முடியும். பிரதமரா? அவரே
பத்திருக்கைகளைப் படித்துக்தான் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட சங்கதிக்களைத்
தெரிந்து கொள்கிறார். அப்படியானால் வேறு யார்? மாட்சிமை மிக்க சோனியாவை தவிர, வேறு
யாராக இருக்க முடியும்
ஆக
பதவியில் இருப்பவர்கள் தொடர்வதும், விலகுவதும், அரசியல் சாசனத்திற்குப் புறம்பான
நிழல் நிர்வாகப் பதவியை வகிக்கும் ஒரு நபரிடம் இருக்கிறது. அவர் தனக்கு
வேண்டியதையெல்லாம் செய்து கொள்வார். ஆனால், எதிலும் மாட்டிக் கொள்ள மாட்டார்.
அவருக்குக் கண்டனம் கிடையாது, தண்டனை கிடையாது. பிரதமரின் நேரடி ஆட்சி என்றால்
அவர் சி.பி.ஐ., தலைவரை இந்நேரம் பதவி
விலகச் சொல்லியிருப்பார். ஆனால் தானே ஒரு பினாமி என்பதால், அவரால் அப்படிச் செய்ய
முடியவில்லை. பாவம்.
இப்படி,
ஒவ்வொன்றிற்கும் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தைப் பெறும் அவலமான நிலைமை, இந்திய
அரசுக்கு இதுவரை வந்ததில்லை.
என்ன
கேவலம் இது என்று மக்கள் பதைக்கின்றனர். ‘பாவம் ஓரிடம், பழி வேறிடம்’ என்ற இந்த
ஆட்சி முறையை எதிர்த்து அரசியல் வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் வீரியமாக எழுதாமல்
இருப்பதும், பேசாமல் இருப்பதும், சோனியாவுக்கு வசதியாக இருக்கிறது. அரசியல்
நிர்வாகத்தில் இவரது இருட்டுத் தலையீட்டிற்குப் பிறகே, இவ்வளவு அலங்கோலம்
நிகழ்ந்திருக்கிறது. இந்த அவலமான, கேவலமான நிலையில் மன்மோகன்சிங் பதவி விலக
வேண்டுமென்று தான் எதிர்கட்சிகள் கூச்சலிட முடிகிறதே ஒழிய, சோனியா அரசியலிருந்து
விலக வேண்டுமென்று, கூப்பாடு போட முடிவதில்லை. இந்த நிலையில் நாட்டு மக்கள் என்ன
செய்ய வேண்டும்?
சோனியாவே
அரசியலிலிருந்து விலகு என்று, முழக்கம் எழுப்பி, அவரை நேரடி மறைமுகப்
பதவிகளிலிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் விலகச் செய்ய வேண்டும். அதை காங்கிரஸ்
அல்லாத கட்சிகள் செய்ய முன் வரவேண்டும். இதற்காக நாடு தழுவிய போராட்டம் நடைபெற வேண்டும். இதைத் தவிர,
மீட்சிக்கு வேறு வழியில்லை.
குற்றங்களை
விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ., நடுநிலை தவறி அரசியல் தலைமைக்காக செயல்படுகிறது
என்று, உச்ச நீதிமன்றம் சொல்லி விட்ட பின், இந்த அமைப்பிற்கு என்ன நம்பகத் தன்மை
இருக்கிறது?
பெரிய
குடும்பத்தைச் சேர்ந்த முதலாளி, லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டி, சாலையில் சிலரைக்
கொன்று விட்டால், அவரா ஜெயிலுக்குப் போவார்? ‘டிரைவர் காரை ஓட்டினார்,
அஜாக்கிரதையால் விபத்து’ என்று வழக்குப் பதிவு செய்யப்படும். டிரைவர் ரிமாண்ட் செய்யப்படுவார்.
உடனே, ஜாமீனில் வெளியே வந்து விடுவார். பின், நத்தை வேக விசாரணையில், ‘காரில்
பழுது இல்லை, டிரைவரும் நன்றாக ஓட்டினார். செத்தவர்கள், எருமை மாடுகள் மிரட்டியதால்
ஓடி வந்த போது தடுக்கி விழுந்து கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்’ என்று வழக்கு
முடிவுக்கு வரும்.
நம்
நாட்டு நிர்வாக வாகனத்தின் லைசன்ஸ், மன்மோகன் சிங் பெயரில் இருக்கிறது. ஓட்டுபவர்
சோனியா என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவர் பிடிபட மாட்டார். அது மட்டுமல்ல, லைசன்ஸ் யார் பெயரில்
இருக்கிறதோ, அவரையும் காப்பாற்றி விடுவார்.
ஆனால் விபத்துக்களின் போது சாலையில் திரளும் மக்கள், டிரைவரைத் திட்டுவர்
தர்ம அடி கொடுப்பர். எஜமான விசுவாசத்திற்காக எல்லாவற்றையும் அவர் தாங்கிக் கொள்ள
வேண்டும், தாங்கிக் கொண்டிருப்பார். பல திரைப்டங்களில் பார்க்கிறோமே, வடிவேலு
காமெடிப் பாத்திரமாக வந்து, தர்ம அடி வாங்குவார். அது போல் நம் பிரதமர் மன்மோகன், நம் அரசியல்
நாடகத்திற்கு ஒரு காமடிப் பாத்திரம்.
இந்த
மோசமான, படுபாதகமான அரசு நிர்வாகம் பாரத மாதாவுக்கு நேர்ந்துள்ள அவமானம். நாட்டை
ஆண்ட முகலாயர்களும், பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும்,
போர்த்துக்கீசியரும் இப்படி அதிகேவலமாக நிர்வாகம் செய்த தில்லை.
சி.பி.ஐ.,
எப்போதோ, எஸ்.பி.ஐ., என்று மாறிவிட்டது.
அது ‘காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ அல்ல. ‘சோனியா பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’
காங்கிரஸ்காரர்கள் இப்படிப்பட்ட அயல், நிழல் தலைமை பற்றி வெட்கப்படுவதில்லை.
இதற்காக, நாம் காங்கிரஸ்கார ர்களின் தேச பக்தியை சந்தேகிக்க வேண்டாம். அவர்களுக்கு
தேசபக்தி இருக்கிறது.. ஆனால் , அவர்களது தேசம் இந்தியா அல்ல, இத்தாலி. ஆனாலும்
இந்தியா, காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்ல முடியாது அல்லவா?
நாமும் இருக்கிறோமே.
மானமுள்ளள
மக்களாகிய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது என்று புரியாத நிலையில்,
சோனியாவின் மறைமுக நிர்வாகத்தை நினைத்து நோந்து போகும்போது, மகாபாரதத்தின்
திரௌவ்பதி துகிலுரிப்பு நிகழ்சியே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலி சபதத்தில்
பரிதவித்த பாடுவார் பாரதியார்.
‘நீண்ட
கருங்குழலை நீசன் பற்றி முன்னிழுத்துச் சென்றான். வழி நெடுக மொய்த்தவராய், என்ன
கொடுமை இதுவேன்று பார்த்திருந்தார். ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமே? வீரமிலா
நாய்கள் விலங்காம் இளவரசன்’.
பாரதியார்
இகழ்ந்து பாடிய, உரைக்க முடியாத அளவுக்கு, நாட்டை கீழ்மையில் தள்ளியுள்ளவர்கள்,
சோனியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள். விதியே, விதியே, என் செய நினைத்தாய்
தமிழ் ஜாதியை… என்று பாரதியார் அங்கலாய்த்தார்.
‘தமிழ்
ஜாதியை’ என்பதை இப்போது, ‘இந்திய ஜாதியை’ என்று மாற்றிக் கொள்ளலாம். கோரமான
விதியின் பிடியிலிருந்து நம்மை மீட்டுக்கொள்வது, மக்களாகிய நன் கையில் தான்
இருக்கிறது. எதிர் வரும் தேர்தலில் சோனியாவையும், காங்கிரஸ்சையும் விலக்கி வைப்பது
தான் ஒரே வழி. செய்வோமா? இல்லையென்றால், மக்களே, நாம் இப்படி பாட
வேண்டியிருக்கும். அதற்குத் தயாரா?
பாரதம்-இது
நம் பாரதம், பாண்டவர்கள் இல்லாத கவுரவர்களின் பாரதம், இது நவ பாரதம், இங்கே தேசப்
பாஞ்சாலியின் தீனக்குரலை கேட்டு, எப்போது வருவார் கண்ணபிரான், துச்சாதனர்கள் வென்ற
பிறகா?
பாஞ்சாலியைக்
காப்பாற்றிய கண்ணபிரானே, நீ பாரத மாதாவை காப்பாற்று வாயா?
நன்றி தினமலர்--------------------------------------------------------------தொடரும்)
No comments:
Post a Comment