17,138
போலீசார், 1,091 எஸ்.ஐ.,க்கள் நியமனம்,முதல்வர் ஜெ.,அறிவிப்பு.
காவல்,
தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில், 19 ஆயிரத்து, 526 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதனுடன்
காவல் நிர்வாகத்தை வலுப்படுத்த, 30 டி.எஸ்.பி., க்கள் புதிதாக நியம்மிக்கப்படுவார்
என, முதல்வர், ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டச்சபையில்,
காவல்துறை மானியம் மீதான விவாத முடிவில், காவல் துறை தொடர்பான, 67 அறிவிப்புகளை முதல்வர்,
ஜெயலலிதா வெளியிட்டார், அதன்விவரம்-
காவல்துறை,தீயணைப்பு
மற்றும் சிறைத்துறையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக, இந்தஆண்டு, தமிழ்நாடு
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 17 ஆயிரத்து 138 காவலர்கள், 1,091 எஸ்.ஐ..,
க்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் மற்றும், 292 சிறைக்காவலர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதுதவிர,
டி.எஸ்.பி., நிலையில் போதுமான அதிகாரிகள் இல்லாததால், அந்தப் பற்றாக் குறையை ஈடுசெய்யும்
வகையில், இந்தாண்டில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், 30 டி.எஸ்.பி,
க்கள், பணிநியமனம் செய்யப்படுவர்.
தமிழக
சிறப்புக் காவலர் இளைஞர் படைதொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டுமுதல்
கட்டமாக, 10 ஆயிரத்து ,500 இளைஞர்கள், இப்பபடைக்கு தேர்வு செய்யப்படுவர்.
காவலர்களுக்கான
பயிற்சிகாலம், எட்டுமாதங்களாக உயர்த்தப் பட்டுள்ளநிலையில் , காவலர் பயிற்சிப் பள்ளிகள்,
பயிற்சி மையங்களில் கட்டுமான வசதிகள், 38 கோடிரூபாயில் மேப்படுத்தப்படும்.
4,800
குடியிருப்புகள்.
காவலர்களின்
சேவையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு அருகில், குடியிருப்புத்
தேவைகளை, 100 சதவிகிதம் பூர்த்து செய்ய, குடியிருப்புகளுக்கு தேவையான நிலம் கண்டறியப்
பட்டு வருகிறது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, 49 ஆயிரத்து 863
காவலர்களுக்கு, குடியிருப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளன.
மேலும்,
6,078 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன .இந்தஆண்டில்,
4,800 குடியிருப்புகள், 575 கோடிரூபாய் செலவில் அனுமதிக்கப்படும். உங்கள் சொந்த இல்ல
திட்டப் பயனாளிகள் பல்வேறு இடங்களில் பணியாற்றும் போலீசார், பயன் பெறுவதற்காக, மேலக்கோட்டையூரில்,
10 ஏக்கர் பரப்பில், உயர்தரம் பொருந்திய உறைவிடப்
பள்ளி துவக்கப்படும்.
போலீசாருக்குசலுகைகள்.
காவலர்கள்
முதல் இன்ஸ்பெக்டர்கள்வரை, தற்போது வழங்கப்படும் இடர்படி 300 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும்,
டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., க்களுக்கு இடர்படி, 350 லிருந்து 450 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
போக்குவரத்து
போலீசாருக்கான சீருடைப்படி, 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மற்றும்,
காவல்துறைப் பணியாளர்களுக்கான சீருடை தையல் கட்டணம், 250 லிருந்து 450 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
போலீசாருக்கான
உணவுப்படி, சென்னையில், 100 ரூபாயலிருந்து 200 ரூபாயாகவும், மற்ற பகுதிகளில், 75 ரூபாயிலிருந்து, 150 ரூபாயாகவும்
உயர்த்தி வழங்கப்படுகிறது. டி.எஸ்..பி.கள் மற்றும் ஏ.டி.எஸ்.பி.க்களுக்கு காப்பீட்டுத்தொகை,
2 லட்சம்ரூபாயிலிருந்து, 4 லட்சம்ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
காவல்
சிறப்பு அங்காடித்திட்டம், வனத்துறை சீருடைப் பணியாளர்களுக்கும் நீடிக்கப்படுகிறது.
மேலும் காவல் சிறப்பு ஆங்காடிகள், 45 இடங்களில் அமைக்கப்படுகிறது. 200 ஊரககாவல் நிலையங்களில்
,உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
அனைத்து
மாவட்டங்கள் மற்றும், காவல்படை தலைமையகங்களில் ,மகளிர் காவலர்களின் வசிதிக்காக,குழந்தைகள்
நலகாப்பகங்கள் அமைக்கப்படுகிறது.
இதரஅறிவிப்புகள்.
#
கடலோரக் காவல்படையை வலுப்படுத்த, 30 கடல்சார் காவல் நிலையல்கள் அமைக்கப்படுகிறது.
#
மோப்பநாய்களுக்கான உணவுக்கட்டணம், நாள் ஒன்றிற்கு 85 ரூபாயிலிருந்து, 200 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
#
தமிழகத்தில் உள்ள, 60 புறக்காவல் நிலையங்களில் ,ஏற்கனவே, 24 புறக்காவல் நிலையங்கள்
தரம் உயர்தப்பட்டுள்ளன்.
#
காவல்துறையில் தொலை தொடர்பு வசதிகளை மேம்படுத்த, 3.17 கோடியில், உயர் கைபேசி கருவிகள்
வாங்கப்படும்.
#
அனைத்து காவல் கமிசனரகங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளில் ,காவல் உணவகங்கள் அமைக்கப்படுகின்றன.
#
தமிழகத்தில் , 500 போலீஸ்நிலையங்களில் , 20 கோடிரூபாயில் , சூரியசக்தியால் இயங்கும்
மின்சார அமைப்புகள் பொருத்தப்படும்.
#
நுண்ணறிவுப் பிரிவின் பல்வேறு பிரிவுகளில் ,பணியாற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, ஸ்மார்ட்
போன்கள் மற்றும், மாநில நுண்ணறிவு சிறப்புப் பிரிவுகளுக்கு, 50 புதியதலைமுறை கம்யூட்டர்களும்
வழங்கப்படும்.
இவை
உள்ளளிட்ட பல்வேறுஅறிவிப்புகளை, முதல்வர் வெளியிட்டார்.
நன்றி-தினமலர்நாள்
24-4-2013
No comments:
Post a Comment