செயலருடன் சுந்தரம். |
நாச்சிமுத்து தோட்டம். |
கோவை
மாவட்ட முன்நாள் காவல் அதிகாரிகளின் சங்கம்.
கோவை மாவட்ட முன்நாள் காவல்
அதிகாரிகளின் சங்கக்கலந்தாய்வு மாதாந்திரக் கூட்டம் இந்த மாதம்
10-2-2013 ஞாயிறு, நகரத்தைவிட்டு
வெளியில் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தை
அடுத்த நெல்லித்துரை என்ற ஊரையடுத்த டி.எஸ்.பி. நாச்சிமுத்து
தோப்பில் நடைபெற்றது. இயற்கையான சூழல். எங்கும் தென்னையும்,
கமுகும் சூழ்ந்த மரங்கள் அடர்த்தியாக
உள்ள குழுமையான இடம்.
வெளியில்
சாமியான போட்டிருந்த்தார். இருக்கைகள் இருந்தன. மீட்டிங் நடத்த கட்டிடத்தின் உள்
அமைத்திருந்தார். சுமார் 45 பேருக்கு மேல் அங்கு கூடினோம்.
இயற்கையான
காற்றில் வெளியில அமர்ந்து தேநீர்
குடித்தோம். நாச்சிம்முத்து
எல்லோரையும் வரவேற்று உபசரித்து நலம் விசாரித்தார். அப்போது
மணிசுமார் 11 இருக்கும்.
பின் கலந்தாய்வு கூட்டம்
உள்ளே நடைபெற்றது. செயலாளர் வேலு முதல்வருக்கு அனுப்பிய
மடல் குறித்து விளக்கிக் கூறினார். தற்போது கால்துறையில் பணியாற்றுபவர்கள்
எதிர் கொள்ளும் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.. முக்கியமாக காவல் துறையினருக்கும் வழக்கறிஞ்ஞர்களுக்கும்
ஏற்படும் மோதல் குறித்து ஓய்வு
பெற்ற நாம் எப்படி உதவுவது
பற்றிப் பேசப்பட்டது. இணையதளம் பற்றிக் கூறப்பட்டது. மத்தியம் ஒரு மணிக்கு
கலந்துரையாடல் முடிக்கப்பட்டது.
பின் மதிய உணவு- அசைவம்,
சைவம் இரண்டும் ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும்
திருப்தியாக உணவரிந்தனர். நாச்சிமுத்துவுக்கு விருந்தோம்பலுக்கு எல்லோரும் நன்றி தெறிவித்தனர். பின்
வெளியில் குழுமையான காற்றில் அவரவர் அனுபவங்கள், மருத்துவ
ஆலோசனைகள், ஜோக்குகள் எல்லாம் சொல்லி ஆனந்தத்ததல்
ஆர்பரித்தனர். ஆணிக்கால் உள்ளவர்கள் செங்கல்லை நன்கு சூடு செய்து
அதன் மீது சிறிது பழுத்த
எருக்கு இலையை வைத்து சூடு
பொருக்கும் அளவு காலால் மிதித்து
வந்தால் குணம் காணலாம் என்று
மகேந்திரசிங் கூறினார். அதை பழனிசாமி அனுபவத்தில்
உண்மை என்றார். ஆவரம்பூவை ஒரு பிடி சுத்தம்
செய்து சாப்பிட்டால் கண்பார்வை நலமடையும் சர்கரைவியாதியும் குணமாகும் என்று சுந்தரம் கூறினார்.
வழக்கத்தில் உள்ள சொற்கள் மாறியது
பற்றி சுந்தரராசன் கூறினார். இரகுபதி சில அந்தரங்க
ஜோக்குகள் கூறி சிரிக்கவைத்தார். அங்கு மாமரங்கள் பூத்துக் குலுங்கின. ஜாதிக்காய்
மரத்தில் மஞ்சள் நிரத்தில் காய்கள் இருந்தன.. மாடுகள் உள்ளன. மண்புழு உரம்
தயாரிக்கிறார். மூன்று குடும்பங்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நாச்சிமுத்து
அதிகாலை 4 மணிக்கு நடைப் பயிற்ச்சி முடித்துத் தோட்டத்திற்கு வந்துவிடுவார். சனி
ஞாயிறு அங்கு நண்பர்களுடன் தங்கிக் கொள்வார்.. அவரது துணைவியார்
மேட்டுப்பாளையத்தில் ‘சுபா’ மருத்துவமனை வைத்துள்ளார். அவர் பல்லாண்டு நலமுடன்
குடும்பத்தாருடன் வாழ வாழ்த்தினோம். பேருந்தில் புரப்படும்போது நாச்சிமுத்துவுக்கு
விருந்தோம்பலுக்கு மேலும் நன்றி கூறி பிரியா விடைபெற்றோம். அப்போது மணி சுமார்
3-30 க்கு மேல் இருக்கும். கோவை 5 மணிக்கு வந்தடைந்தோம். பின் அவரவர் வீட்டிற்குச்
சென்றோம்.
வீடு. |
தொடரும்.
No comments:
Post a Comment