தடைகள் தாண்டிய பயணம்!
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். தேர்வு பெறுபவர்களுக்கு சர்தார்
வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி பல்வேறு கடினமான பயிற்சிகள்
கொடுக்கும். அதில் சிறப்பாகப் பயிற்சிபெற்று முதல் இடத்தைப்
பிடிப்பவர்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் சுழற்கோப்பை பரிசாக
வழங்கப்படும். 2010-ம் ஆண்டு இதில் பயிற்சி பெற்ற 125 நபர்களில் சிறப்பாகச்
செயல்பட்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் டாக்டர்.லோகநாதன். தற்போது
இவர் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்துவருகிறார். அவரிடம்
பேசியதில்...
...
''எனக்குச் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கத்துல
புதுப்பேட்டைங்கிற கிராமம். அப்பா கைத்தறி நெசவுத் தொழில் பண்ணுறார்.
வீட்டுல நான்தான் முதல் பட்டதாரி. படிச்சு முடிச்சிட்டு சிவில் சர்வீஸ்
எக்ஸாம் எழுதினேன். 2001-ல் எக்ஸாம் எழுதி 208-வது ரேங்க் வாங்கினேன்.
மத்திய அரசோட ஓ.பி.சி. பட்டியல்ல இருந்த பிழை காரணமாக எனக்கு ஐ.பி.எஸ்.
கிடைக்கலை. அதனால, எனக்கு குரூப்புக்கான அந்தஸ்து தந்து 2002-ல
பாண்டிச்சேரியில டெபுடி கலெக்டர் பதவி கொடுத்தாங்க. தகுந்த ஆதாரத்தோட
கோர்ட்ல கேஸ் போட்டேன். இதுக்கு நடுவுல எக்ஸாம் எழுதி ஐ.எப்.எஸ். ஆபிஸர்
ஆகிட்டேன். 2010-ல ஐ.பி.எஸ்-ஸுக்காக நான் போட்ட கேஸ்ல எனக்கு சாதகமா
தீர்ப்பு வந்துச்சு. 2009, 10-ல் சிவில் சர்வீஸ் எக்ஸாம் பாஸ்
பண்ணினவங்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்தாங்க. அவங்ககூட நானும் ட்ரெய்னிங்
எடுத்தேன். சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில ட்ரெய்னிங்
கொடுத்தாங்க. அதுல மொத்தம் 125 பேர் இருந்தாங்க. அவங்க எல்லாம் 2010-ல
எக்ஸாம் எழுதி வந்தவங்க. அதனால அவங்க வயசு 23-லிருந்து 26-தான் இருக்கும்.
அப்போ எனக்கு வயசு 36. ஏறத்தாழ 13 வயசுவரைக்கும் வித்தியாசம்.
அவங்க இளைய தலைமுறைங்கிறதால அவங்ககூட சேர்ந்து ட்ரெய்னிங் எடுக்க எனக்குக்
கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. முதல்கட்ட பயிற்சியில் பல தரப்பட்ட
விதிகள், சட்டங்கள் சம்பந்தப்பட்ட பயிற்சி கொடுத்தாங்க. அடுத்து துப்பாக்கி
சுடுதல், நீச்சல் பயிற்சி, ட்ரில் மற்றும் விசாரணை பண்ணும் பயிற்சிகள்,
தடயவியல் சம்பந்தப்பட்ட பயிற்சி, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதுபற்றிப்
பயிற்சிக் கொடுத்தாங்க. அப்புறம் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஏ.எஸ்.பி-யா
போடுவாங்க. ஏழு மாசம் அங்கே வேலை பார்த்து அந்த அனுபவங்களை
சமர்ப்பிக்கணும்.
முதல் கட்டம், மாவட்ட அனுபவம்னு எல்லா
செயல்பாடுகளையும் கணக்கெடுத்து மார்க் போடுவாங்க. அதில் நான்தான் நம்பர்
ஒன். அதனால, சர்தார் வல்லபாய் படேல் சுழற்கோப்பை கிடைச்சது. இதில் நான்
ஒண்ணு மட்டும்தான் கத்துக்கிட்டேன். தைரியமும், துணிச்சலும் இருந்தால்
எங்கேயும் சாதிக்கலாம்!''
முயற்சி தன்மெய் வருத்தக் கூலிதரும்!See More
— with Jayaraman Loganathan.
தடைகள் தாண்டிய பயணம்!
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். தேர்வு பெறுபவர்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி பல்வேறு கடினமான பயிற்சிகள் கொடுக்கும். அதில் சிறப்பாகப் பயிற்சிபெற்று முதல் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்படும். 2010-ம் ஆண்டு இதில் பயிற்சி பெற்ற 125 நபர்களில் சிறப்பாகச் செயல்பட்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் டாக்டர்.லோகநாதன். தற்போது இவர் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்துவருகிறார். அவரிடம் பேசியதில்...
...
''எனக்குச் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கத்துல புதுப்பேட்டைங்கிற கிராமம். அப்பா கைத்தறி நெசவுத் தொழில் பண்ணுறார். வீட்டுல நான்தான் முதல் பட்டதாரி. படிச்சு முடிச்சிட்டு சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதினேன். 2001-ல் எக்ஸாம் எழுதி 208-வது ரேங்க் வாங்கினேன். மத்திய அரசோட ஓ.பி.சி. பட்டியல்ல இருந்த பிழை காரணமாக எனக்கு ஐ.பி.எஸ். கிடைக்கலை. அதனால, எனக்கு குரூப்புக்கான அந்தஸ்து தந்து 2002-ல பாண்டிச்சேரியில டெபுடி கலெக்டர் பதவி கொடுத்தாங்க. தகுந்த ஆதாரத்தோட கோர்ட்ல கேஸ் போட்டேன். இதுக்கு நடுவுல எக்ஸாம் எழுதி ஐ.எப்.எஸ். ஆபிஸர் ஆகிட்டேன். 2010-ல ஐ.பி.எஸ்-ஸுக்காக நான் போட்ட கேஸ்ல எனக்கு சாதகமா தீர்ப்பு வந்துச்சு. 2009, 10-ல் சிவில் சர்வீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணினவங்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்தாங்க. அவங்ககூட நானும் ட்ரெய்னிங் எடுத்தேன். சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில ட்ரெய்னிங் கொடுத்தாங்க. அதுல மொத்தம் 125 பேர் இருந்தாங்க. அவங்க எல்லாம் 2010-ல எக்ஸாம் எழுதி வந்தவங்க. அதனால அவங்க வயசு 23-லிருந்து 26-தான் இருக்கும். அப்போ எனக்கு வயசு 36. ஏறத்தாழ 13 வயசுவரைக்கும் வித்தியாசம்.
அவங்க இளைய தலைமுறைங்கிறதால அவங்ககூட சேர்ந்து ட்ரெய்னிங் எடுக்க எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. முதல்கட்ட பயிற்சியில் பல தரப்பட்ட விதிகள், சட்டங்கள் சம்பந்தப்பட்ட பயிற்சி கொடுத்தாங்க. அடுத்து துப்பாக்கி சுடுதல், நீச்சல் பயிற்சி, ட்ரில் மற்றும் விசாரணை பண்ணும் பயிற்சிகள், தடயவியல் சம்பந்தப்பட்ட பயிற்சி, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதுபற்றிப் பயிற்சிக் கொடுத்தாங்க. அப்புறம் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஏ.எஸ்.பி-யா போடுவாங்க. ஏழு மாசம் அங்கே வேலை பார்த்து அந்த அனுபவங்களை சமர்ப்பிக்கணும்.
முதல் கட்டம், மாவட்ட அனுபவம்னு எல்லா செயல்பாடுகளையும் கணக்கெடுத்து மார்க் போடுவாங்க. அதில் நான்தான் நம்பர் ஒன். அதனால, சர்தார் வல்லபாய் படேல் சுழற்கோப்பை கிடைச்சது. இதில் நான் ஒண்ணு மட்டும்தான் கத்துக்கிட்டேன். தைரியமும், துணிச்சலும் இருந்தால் எங்கேயும் சாதிக்கலாம்!''
முயற்சி தன்மெய் வருத்தக் கூலிதரும்!See More
— with Jayaraman Loganathan.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். தேர்வு பெறுபவர்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி பல்வேறு கடினமான பயிற்சிகள் கொடுக்கும். அதில் சிறப்பாகப் பயிற்சிபெற்று முதல் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்படும். 2010-ம் ஆண்டு இதில் பயிற்சி பெற்ற 125 நபர்களில் சிறப்பாகச் செயல்பட்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் டாக்டர்.லோகநாதன். தற்போது இவர் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்துவருகிறார். அவரிடம் பேசியதில்...