Tuesday, August 30, 2011

ஆர்டர்லி முறைக்கு வேட்டு?


ஆர்டர்லி முறைக்கு வேட்டு வருமா? போலீஸ்சார் கோரிக்கை.

தமிழிக போலீஸ்சில், ஆர்டர்லி முறை ஒழிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ்சார் பணியில் உள்ளனர். பொது மக்களில் 650 பேருக்கு ஒரு போலீஸ் என்ற நிலை உள்ளது. போலீஸ் நிலையங்களை பொறுத்தவரை, சார்ந்த பகுதி வளர்ந்த பகுதியா, வளரும் பகுதியா என்பதை கணக்கிட்டு,  போலீசாரின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வேளை அந்த பகுதி வளர்ந்து  கொண்டிருந்தால் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நிர்ணிக்கப்பட்ட போலீஸ்சாரின் எண்ணிக்கை என்பது பெரும்பாலான நேரங்களில் போலீஸ் நிலையங்களில் இருப்பதில்லை.

ஆண்டு தோறும் ஓய்வு பெறும் போலீஸ்சார் எண்ணிக்கை உயர்வதும்,  ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள்,  பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீஸ்சார் பணியாற்று வருவதும் இதற்கு காரணமாக் கூறப்படுகிறது. கடந்தமாதம் வரை, சென்னை போலீஸ்சில் 1800 போலீஸ், 330 எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக இருந்தன, சமீபத்தில், பயிற்சி முடித்த 8000 க்கும் மேற்பட்ட போலீசார், உள்ளூர், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புப்போலீசில் பணயமர்த்தப்பட்டனர். மேலும் ஆயுதப்படையில் இருந்த போலீசார் போலீஸ் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

சென்னையில் மட்டுமல்லாது, அனைத் மாநகர்களிலும், மாவட்டங்களிலும், இருந்த பெரும்பான்மை போலீஸ் காலிப்பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட அளவில் ஆர்டர்லிகள் இருப்பதால், அவர்களி போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டாலும், அங்கு பணியாற்றாமல் அதிகாரிகளின் வீட்டிற்கே திரும்பவும் அழைக்கப்படுகின்றனர்.  இதனால், கைக்கு எட்டியது வாயிக்கு எட்டாத நாலையில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தவிக்கின்றனர்.

ஆனால், பல போலீஸ் நிலையங்களில் போலீசார், ஆர்டர்லிகளாக பணியாற்ற சென்று விடுவதால், போலீஸ் பற்றாக்குறை ஏற்படுவதுடன், பணிச்சுமையும் அதிகரிக்கிறது.  குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வேலை, மற்ற நேரத்தில் ஓய்வு, உரிய நேரத்தில் ரிவார்டு மற்றும்  புரமோசன் கிடைப்பதால் சிலர் அந்த வேலையை மட்டும் பார்த்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பயிற்சி முடிந்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அல்லது ஆயுதப்படையில் பணியாற்றும் போதே சிலர் ஆர்டர்லிகளாக தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தமிழ் நாடு சிறப்பு போலீசில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆர்டர்லிகளாக பணியாற்றி வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிகாலம் தொட்டு, இன்று வரை இம்முறை ஒழிக்கப்படாமலேயே தொடர்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிப்ப
தாகக்கூறும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிலாவது இந்த ஆர்டர்லிக்கள் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும், அல்லது இம்முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்படும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 
---------------------------------------------------------------------(தொடரும்)
நன்றி-தினமலர்.

Friday, August 26, 2011

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு பாட த்தை தேர்வு செய்தல்.


யுனியன் பப்ளிக்   சர்வீஸ் கமிசம் எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத  பாடத்தை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் மாணவர்களிடையே நிலவுகிறது. இந்திய  ஆட்சிப்பணி உள்ளிட்ட,  முதன்மையான பல அரசுப்பணிகளில் சேர்ந்து பணியாற்ற சிவில் சர்வீஸ் தேர்வு பயன் படுகிறது. இந்த தேர்வை எழுத அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்  ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை எழுத குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு முதன்மை பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதில் மாணவர்கள்  தங்களுக்கு பரிச்சையமான  மற்றும்  பாடத்தை தேர்வு செய்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்.

பொதுவாக மாணவர்கள் வரலா று, சமூகவியல் மற்றும் அரசியல் அறிவியல் தொடர்பான பாடங்கள் தேர்வு செய்தால் எளிதாக சாதிக்கலாம் என நினைக்கின்றனர்.  இது சரியான கருத்து அல்ல.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதாவது இரு பாடப்பிரிவில் ஆழ்ந்த அறிவு இருந்தால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க முடியும். பட்டப்படிப்பில் வரலாறு, பொருளாதாரம் படித்திருந்தால் அந்த பாடங்களைத்தான் ஆழ்ந்து தெரிந்திருக்க முடியும். அதனால் அதையே தேர்வு செய்யலாம். மாறாக அறிவியல் பாடங்களை தேர்வு செய்யக் கூடாது.

 சிவில் சர்வீஸ் தேர்வு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறுகிறது. முதன்னிலைத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாத த்தில் நடைபெறும்.  இதற்கு குறிப்பிடப்பட்ட 22 பாடப்பிரிவுகளில் இருந்து ஏதாவது இரண்டு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். முதனிலைத்தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதிலும் இரண்டு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

முதன்மைத்தேர்வில் எட்டுத் தாள்கள் இருக்கும்.  இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.  முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுகின்றனர். ஆனால் 700 முதல் 800 பேர்களே தெர்வு செய்யப்படுகின்றனர். மேலும் சிவில் சர்வீஸ் தேர்வின் விபரங்களை  www.upsc.gov.in  என்ற மத்திய அரசின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

---------------------------------------------------------------------(தொடரும்)

Monday, August 8, 2011

ஊழலுக்கு எதிர்ப்பு.




அன்றும் இன்றும் லஞ்ச ஒழிப்பில் என்.கே.வேலு ADSP அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு.

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வரும் 16 ம் தேதி கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடக்கிறது.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளர் வேலு அறிக்கை:

ஆயிரமாயிரம் சத்தியம் செய்து ஓட்டு வாங்கி பதவியைப் பிடிக்கும் அரசியல்வாதிகள், உலகமகா ஊழல்களை புரிந்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவிக்கின்றனர். தலைமைப்பதவி வகிப்போர் தட்டிக் கேட்கும் திறனற்றவர்களாக  உள்ளனர். விளைவு, ஓட்டளித்த மக்கள் ஏமாளிகளாக மாறும் நிலை, அரசு நிர்வாகம் மோசமாகி வருவதால், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன.

எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் ஊழலில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கும் வகையில், வலுவான ஜன்லோக்பால் சட்டம் தேவை. இதை வலியுறுத்தி,  காந்தியவாதி அன்னா ஹசாரே மற்றும் குழுவினர் வரும் 
16 ம் தேதி டில்லியில் உண்ணாவிருதம் இருக்க முடிவு செய்துள்ளனர். அவரது கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, அன்றைய தினம் கோவை, காந்தி புரத்தில்  உண்ணாவிரதம் இருக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.

அரசியல் சாராத பொதுநல அமைப்புகள், தொழில் அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள், கல்லூரி மாணவர் அமைப்புகள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த உண்ணா
விரதத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் வரும் 13 ம் தேதி மாலை 4.00 மணியளவில் திருச்சி சாலை, அல்வேர்னியா பள்ளி எதிரிலுள்ள எஸ்.என்., அரங்கத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. அனைத்து அமைப்புகளும், மக்களும் பங்கேற்று ஆலோசனை தெரிவிக்கலாம். விபரங்களுக்கு, 98422 11993, 9789777199, 94435 78224 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 ----------------------------------------------------------------------------------------(தொடரும்)