ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி.
பாரதியார் பல்கலையில் அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் முதல் நிலை தேர்வுக்கான இலவசப்பயிற்சியில் பங்கேற்பதற்கு டிச., 30 ந் தேதி நுழைவுத் தேர்வு நடக்கின்றது, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய பயிற்சி இயக்குனர் பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரதியார் பலகலையில் தமிழக அரசின் நிதியுதவியுடன், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் செயல் பட்டு வருகிறது. கடந்த ஆக., மாதம் நடந்த யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வில், தேசிய அளவில் 3,4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், கோவையில் யு.பி.எஸ்.சி., சார்பில் அடுத்தாண்டு ஆக., 23ல் ஐ.ஏ.எஸ்.,முதல் நிலை தேர்வு நடக்கிறது. அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் இத்தேரவுக்கான முழுநேர இலவச பயிற்சி வகுப்பு அடுத்தாண்டு பி,23ல் துவங்குகிறது. இம்மையத்தில் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி, சர்வதேச மாணவர் விடுதியில் தங்குமிடம், நூலக வசதி, இணையதள வசதி, 2000 பூபாய்க்கான மாத உணவுப்படி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
ஆறு மாதகாலம் தங்குமிட வசதியுடன் நடைபெறவுள்ள இப்பயிறசயில் பங்கேற்பதற்கான நுழைவுத் தேர்வு டச., 30ந் தேதி நடக்கிறது. பல்கலை
யிலுள்ள டாக்டர் உஷா மேத்தா அரங்கில் காலை 10.00 - 12 மணி வரை இத்தேர்வு நடக்கிறது.
நுழைவுத் தேர்வானது யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வின் அடிப்படையில் நடைபெறும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பல்கலையின் "www,ac.in" என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிரக்கம் செய்ய வேண்டும்.
மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச., 15ந் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்-பயிற்சி இயக்குனர், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-45 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வறு,, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நன்றி. தினமலர். தேதி 15-11-2014.
-------------------------------------------------------(தொடரும்)