Sunday, February 2, 2014

திருநெல்வேலி போலீஸ் பெருமை.

திருநெல்வேலியை கலக்கும் போலீஸ் அதிகாரிகள்:

முன்பெல்லாம் திருநெல்வேலி என்றாலே வன்முறை, சாதிச் சச்சரவு, வெட்டு குத்து, கூலிப்படை, கொலை கொள்ளை... என்பது தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் இப்போது அப்படியில்லை. கடந்த ஓரிரு ஆண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. குறிப்பாக கூலிப்படை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், நம் மாவட்டத்திற்கு திறமைமிக்க போலீஸ் அதிகாரிகள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்:

கருணாகரன் IAS (District Collector):
''நேர்மையின் மறுமுகம்'' என்று இவரை அழைக்கலாம். நிர்வாகத் திறமைமிக்கவர். சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் தேர்ந்தவர். முன்பு கோவை கலெக்டராக பணியாற்றி, அங்குள்ள மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

T.P. சுரேஷ்குமார் (DCP, Law and Order):
நெல்லை மாவட்ட துணை போலீஸ் கமிஷனரான இவர், 2013-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் பதக்கம் பெற்றவர். முன்பு இவர், ஈரோடு மாவட்டத்தில் ADSP-ஆக பணியாற்றிய காலத்தில், மது விலக்கு வேட்டையை தீவிரப்படுத்தி, 3400 க்கும் மேற்பட்ட மது விலக்கு குற்ற வழக்குகளை கண்டுபிடித்ததுடன், போலி மதுபான கடத்தலையும், எரி சாராயத்தையும் கைப்பற்றி, தமிழக அரசின் பாராட்டைப் பெற்றவர்.

விஜயேந்திர பிதரி IPS (District Superintendent of Police):
துடிப்பான இளம் ஐ.பி.எஸ். அதிகாரி. கலவரங்களை அடக்குவதில் திறமைமிக்கவர். புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதற்க்காக, தமிழக அரசிடமிருந்து சிறப்பு பதக்கம் பெற்றவர்.

சுமித் சரண் IPS (DIG, Tirunelveli Range):
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், முன்பு கோவை டி.ஐ.ஜி.,யாக பணியாற்றியவர். தென்மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நல்ல வழிகாட்டியாக செயல்பட்டு வருபவர். சி.பி.ஐ.,யிலும் பணியாற்றிய அனுபவமுடையவர்.

இப்போது நமக்கு இருக்கும் கவலை, நமது அண்டை மாவட்டமான தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. அதையும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், தென்மாவட்டங்கள் அமைதிப் பூங்காவனமாக காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1 comment:

  1. மிகவும் சந்தோசமான செய்தி ஐயா... மேலும் தொடரட்டும்...

    ReplyDelete