Promotion and Postings of IPS officers
தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா பதவி உயர்வு பெற்று, மதுரை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*கமுதி உதவி போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் திருச்சி நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.
*அரவாக்குறிச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல்ஹக் பதவி உயர்வு பெற்று, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
*உதவி போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். விடுமுறையில் சென்றுள்ள அவர், பணிக்கு திரும்பியதும் உரிய பதவி கொடுக்கப்படும்.
*திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சி.விஜயகுமார் பதவி உயர்வு பெற்று, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு
*சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு எம்.துரை சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
*தேன்கனிக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பி.விஜயகுமார் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.
*தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெ.மகேஷ் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
*தோவாளை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜி.தர்மராஜன் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*வேதாரண்யம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பதவி உயர்வு பெற்று, நாகப்பட்டினம் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
சென்னை துணை கமிஷனர்கள்
*தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெ.ராஜேந்திரன், சென்னை நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
*மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, சென்னை அடையாறு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
*சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆர்.சுதாகர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.
*சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஜி.கார்த்திகேயன், போலீஸ் பயிற்சி கல்லூரி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
*காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தனராஜ், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
*மதுரை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனர் ஆர்.திருநாவுக்கரசு, திருப்பூர் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
*வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பிரவேஷ் குமார், கோவை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனர் ஆகிறார்.
*தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்பு, சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்
*சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜேஸ்வரி, திருச்சி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*கோவை போலீஸ் சூப்பிரண்டு உமா, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகிறார்.
*புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தமிழ்சந்திரன், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
*சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெ.ரவீந்திரன், உளுந்தூர் பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10–வது பட்டாலியன் கமாண்டண்டாக பதவி ஏற்பார்.
*உளுந்தூர் பேட்டை சிறப்பு காவல்படை 10–வது பட்டாலியன் கமாண்டண்ட் எஸ்.அப்துல்கனி, தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
*நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை மாதவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அமைப்பு சார்ந்த குற்ற உளவுப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் எம்.சுதாகர், கோவை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*திருச்சி போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்–ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.
*சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்–ஒழுங்கு) பணியாற்றும் எஸ்.பன்னீர்செல்வம், சென்னை போக்குவரத்து போலீஸ் (மேற்கு) துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
*சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13–வது பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றும் என்.காமினி, பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
*பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக உள்ள எஸ்.மணி, வீராபுரம் சிறப்பு காவல்படை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி
*திருச்சி நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செல்வகுமார், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
*சென்னை அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) துணை கமிஷனர் ஆகிறார்.
*அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பிரபாகரன், சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
*பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------(தொடரும்.