Saturday, December 6, 2014

திருச்சி காவல் துறையில்வாட்ஸ் அப்



வாட்ஸ் அப்பில் கலக்கும் திருச்சி காவல்துறை !!
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும் புகார் மீது திருச்சி காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஸ்மார் போன் வந்தபிறகு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் சமீபகாலமாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருந்தவர்கள், வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றார்கள்.
இந்நிலையில்தான் தமிழக காவல்துறையும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் களமிறங்க துவங்கின. குறிப்பாக திருச்சி மாநகரில் நடக்கும் கொள்ளை, சங்கிலி பறிப்பு, விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அந்த அறிவிப்பு தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால் துவக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் இதுவரை 59 பேர் புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " இதுவரை வாட்ஸ்அப் மூலம் 56 பேரும், ஃபேஸ்புக் மூலம் 3 பேரும் என 59 பேர் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் திருச்சி மாநகரில் நடைபெறும் வழக்கு பதிவு, நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்யப்படுகின்றது. அதில் சில நெகட்டிவு கமெண்ட் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசன் போய் அலைவதைவிட வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் தகவல்போட்டவுடன், அந்த தகவல் உடனடியாக திருச்சியில் உள்ள சம்மந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு சொல்லப்படுகின்றது. அடுத்து அரை மணி நேரத்தில் தகவல் உறுதி செய்யப்பட்டு சட்டென நடவடிக்கை எடுக்கப்படுகிறது"என்றார்.
சமூக வலைதளங்கள், சமூக அவலங்களை ஒழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் சந்தோசம்.
News Credit : Vikatan EMagazine
தொடரும்.