Sunday, September 2, 2012

ஊழல்




என்.கே.வேலு (எடிஎஸ்பி)

ஊழல்

பஞ்சமா பாதகங்களின் முதல் படி லஞ்சம்.லஞ்சம் வாங்கத் துணிந்தவன் எந்த பாவத்திற்கும் அஞ்சமாட்டான்.

ஊழல் ஒரு பெரும் பாவம். அதை செய்து விட்டு எத்தனை பூஜைகள் செய்தாலும் அதற்கு எந்த விமோசனமும் இல்லை. அது ஆண்டவனையே ஏமாற்றும் வேலை.

சமுதாயத்திற்கோ தீமை விளைவிக்காத ஊழல் என்று எதுவும் இல்லை.

ஊழல் ஒரு கிரிமினல் குற்றம். ஜேப்படி, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, எல்லாவற்றையும் விட மிக மோசமானது. கீழ்தரமானது. கேவலமானது.

ஊழல் செய்பவன் ஒரு கிரிமினல் குற்றவாளி. ஒரு நிமிடம் கூட அவன் எந்த பதவியிலும் இருக்கவோ அல்லது மக்கள் வரிப்பணத்திலிருந்து மாதாமாதம் சம்பளம் வாங்கவோ லாயக்கற்றவன். ஊழல்வாதி ஒரு சமுதாய விரோதி. தேச துரோகி. சமுதாயத்திஃ வாழ அருகதையற்றவன். அவன் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை.

ANTI CORRUPTION MOVEMENT
COIMBATORE DISTRICT UNIT.

---------------------------------------------------------------------(தொடரும்)