ஆர்.நடராஜ். ஐ,பி.எஸ். |
காவல் துறைக்கோர் பெருமை.
தமிழக அரசு புதுமையான அதிரடி நடவடிக்கைகளில் தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புதிய தலைவராக காவல் துறையில் ஓய்வு
பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.நடராஜை (ஐ.பி.எஸ்.)நியமித்திருப்பது காவல் துறைக்கோர்
பெருமை. இதிலிருந்து அவரது நேர்மையான செயல்கள், நம்பிக்கைக்குப் பாத்திரம், லஞ்ச ஒழிப்பிற்கோர்
நல் மதிப்பு, கெட்ட பெயருள்ள இந்த துறைக்குத் தலமை ஓர் வரப்பிரசாதம், நேர்மையான தேர்வு
முறைகள் புதிய ஆழுமைத் திறன்கள் எதிர் பார்த்திருக்கும் மக்களுக்கு நேர்மையான திரமையான
ஊழலற்ற வெழிப்படையான செயல் பாட்டை எதிர்பார்க்கிறார்கள். தலைமையேற்று அவர் மக்களுக்காகக் கூறியிருப்பது.
“அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்
நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளேன். முதலில், தேர்வாணையத்தைச் சூழ்ந்துள்ள
புகைமண்டலம் அகற்றப்படும். நாணயம் பெறாத. நாணயமான சேவையாக தேர்வாணையம் செயல்படும்.
வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும்.
எழுத்துத் தேர்வு எப்போது, நேர்முகத்தேர்வு
எப்போது, முடிவுகள் எப்போது என்ற விவரங்கள் அனைத்தும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும்.
தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை
இணையதளத்தில் வெளியிடப்படும்.
அரசுப்பணியாளர்களின் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு, தேர்வுக்கான பாடத்திட்டங்களில்
உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். தேர்வர்களின் பகுத்தாய்வுத்திறனை ஆராயும் வகையில்
தேர்வு முறையல் மாற்றம் கொண்டுவரப்படும். தேர்வு முடிந்த பிறகு, இணையதளத்தில் விடைகள் வெளியிடப்படும். தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின்
விடைத்தாள்களை சம்பத்தப்பட்ட தேர்வர்கள் பார்வையிடலாம். தேர்வு நடைபெறும் அறைகளில்
வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத்தேர்வுகள் வெப் கேமரா மூலம்
பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால், வீடியோ பதிவை தேர்வர்கள் காணலாம். தேர்வாணையத்தின்
அனைத்து நடவடிக்கைகளும் கனிணியில் பதிவு செய்யப்படும்.
முடிவுகள் தாமதமாவதற்கு சில
நியானமான காரணங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வில் இரண்டு முறை மதிப்பீடு
செய்யப்படுகிறது. அதில் வித்தியாசம் அதிகமாக இருந்தால்
மூன்றாவது மதிப்பீட்டுக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு எழுதியவருக்கு முழுமையான வாய்ப்பு
அளிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற விதிகள் உள்ளன. ஆனாலும் கூட இந்த நடைமுறைகளை
குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தாமதங்களைத் தவிர்த்தாலே
பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்த்துவிடலாம்.
ஆணையத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள், தனிநபர்கள்ச்
சார்ந்த தாக அல்லாமல் நிரந்தரமாக நீடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனக்குப்
பணிகாலம் குறைவாக இருந்தாலும்கூட, எடுத்திருக்கிற பணியில் அதிகநேரம் செலவிடுவதாலும்,
அக்கரையோடும் ஆர்வத்தோடும் செயல்படுவதாலும் பத்தாண்டுகளில் செய்யக்கூடிய காரியங்களை
என்னால் ஒரே ஆண்டில் செய்துவிட முடியும்.
குறுக்கீடு, நல்லமுறையில் தலையிடுதல் என இரண்டு விதங்கள்
உள்ளன. நல்ல நோக்கத்திற்காக ஒரு தலையிட்டு
நல்லது கெட்டது என்று சொல்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. அதைக் குறுக்கீடு
என்று சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நல்ல நோக்கத்திற்காக தலையிடுவதை வரவேற்பேன்.
குறுக்கீடுகளை அனுமதிக்க மாட்டேன்.
தேர்வாணயத்திலேயே காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களில்
தற்காலிக பணியாளர்களை நியமித்திருக்கிறோம். ஒரு பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றால்
ஒவ்வொரு முறையும் அரசை அணுக வேண்டியுள்ளது. உரிய முயற்சிகளைச் செய்தால் காலிப்பணியிடங்களை
நிரப்பலாம். அதற்கான நடவடிக்கை எடுப்போம்.
தேர்வாணயத்தின் இணையதளத்தை விரிவுபடுத்தி மக்களூடன் கலந்துரையாடக்கூடிய
வகையில் அதை மாற்றப் போகிறோம். அதே போல, தேர்வு குறித்த தகவல் உள்ளிட்ட விவரங்களை அறிந்து
கொள்வதறிகாக தேர்வாணயத்தில் ‘தகவல் அறியும் மையம்’ ஒன்றையும் ஏற்படுத்த உள்ளோம். அங்கு, கட்டணமில்ல தொலைபேசி
எண்ணும் வழங்கப்படும். இளைஞர்கள் அதிகளவில்
ஃபேஸ்புக் பயன்படுத்திகிறார்கள். எனவே, தேர்வாணையத்திற்க்கு
ஃபேஸ்புக்கிலும் ஒரு கணக்கு ஆரம்பிக்கலாமென்று யோசித்திருக்கிறேன். இது தேர்வாணயத்திற்கும்
தேர்வு எழுதும் இழைஞர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இது போன்ற நடவடிக்கைகளால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்
என்று நம்புகிறேன். எனவே, நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போட்டித்தேர்வுகளில்
இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.”
-------------------------------------------------------(தொடரும்)