கருப்பண்ணன் தேவாரம் ஐ.பி.எஸ் உடன். |
ஊமையர்குரல்.
சிறப்பிதழ்-6-8-2012-------------------------------------------------------------------------ஆகஸ்ட்
2012.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத விழிப்பணர்வென்று சங்கே முழங்கு!
சங்கம் சேர்
லஞ்சம் எதிர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
எப்பொருள் யார்யார்
வாய்க கேட்பினும், எத்தன்மைத்தாயினும் – அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதறிவு!
உள்நாட்டு முட்டாள்கள்,
நாசகாரரிடமிருந்து நாட்டைக் காக்க-கடமை செய்து இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு வீர வணக்கம்!
விடுதலை பெற்ற
ஜனயாக நாட்டில் ஆயுதமின்றிக் காரியங்கள் ஆற்றமுடியும், அப்படிதுதான் செய்ய முடியும்.மக்கள்
நலனுக்காகப் போராடினாலும் கத்தி எடுத்துப் போராடுவதும் சட்டத்தைக் காக்கும் காவலர்களைக்
கொன்று அவர் குடும்பங்களை அனாதைகளாக்குவதும் முட்டாள் தனத்தின் உச்சம்.
உலகின் மிகப்பெரிய
சாம்ராஜ்யத்தையே தன் அகிம்சை ஆயுதத்தால் – வீழ்த்தி இந்தியாவை விடுவித்தவர் மோகன்தாஸ்
கரம் சந்த் காந்தி.அதனால் அவர் பெரியார் அல்லது மகாத்மா என்று சமஸ்கிரதத்தில் அழைக்கப்பட்டார்.
அவர் தலைமையை
லட்சோப லட்சம் இந்தியர்கள், கோடான கோடி இந்தியர் – ஆதரித்து நின்றால் அவரின் அகிம்சைப்
போரில் வெள்ளையர் தோற்றோடினர்.சுதந்திரம் அவர்கள் கொடுக்கவில்லை.அவர்களின் சொத்துக்களை
வணிகங்களை நிலைநாட்டிக் கொள்ள, தாங்களாகச் சுதந்திரம் கொடுத்ததாக நாடகமாடினர்.
‘சாதி மரம் பார்க்காதே,
மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் ஆண்டவனின் குழந்தைகள்’ என்று போதித்த அந்த மகான், விடுதலை
விழாவில் பங்கேற்காமல், கல்கத்தாவில் நவகாளியில் தாக்கப்பட்ட முஸ்லிம் சகோதர்களைக்காக்க
தன் இன்னுயிர் தரத்தயார் என்று குறுக்கே நின்று இஸ்லாமிய சிறுபான்மையைக் காத்தவர்.
இறுதியில் தான் பிறந்த மண்ணிலேயே தலையில் பிறந்ததாகப் பீத்திக் கொள்ளும் பார்பன மதவெறியனால்
சுட்டுக் கொல்லப்பட்டு இறந்தவர்.
அந்த புனித மண்ணில்
அமைதி நிலவ தம் பெண்டு பிள்ளைகளை விட்டு, விழாக் காலங்களிலும் தெருவில் நிற்பவர்கள்
காவலர்கள்.உலகமே நிம்மதியாகத் தூங்க, நாம் இரவெல்லாம் கண்விழிக்கின்றோம்.கலவரம் என்றால்,
8 மணிநேரக்கணக்கின்றி, தூக்கமின்றி, ஓய்வின்றி 24 முதல் 48 மணி நேரம் கூட கண்விழித்துப்
பணியாற்றுகிறோம்.
அப்படி நக்சலைட்டுகளைப்
பிடித்து வந்த ஆய்வாளர் பழனிசாமி மற்றும்இருகாவலர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகியோர்கள்
கடந்த 6-8-1980 அன்று திருப்பத்தூரில் வெடிகுண்டுக்கு ஆளாகி பெண்டு பிள்ளைகளைத் தவிக்க
விட்டு விண்ணுலகம் எய்தினர். அவர்களுக்கு எம் வீர வணக்கம்! அந்தக் கொடூரர்கள் கூட்டத்தை,
மற்றும் சமூக விரோதிகளான காடுதிருடிகள் கூட்டங்களைத் தேடித் தேடி அழித்த – தான் அழியாமல்
தப்பிய மூளை வலுவுள்ள நம் தலைவர் தேவாரம் ஐயா அவர்கள் இந்த விழாவை ஆண்டு தோறும் திருப்பத்தூரில்
நடத்துவது மிகவும் பெருமையான விசயம். அவர் நீடூழி வாழவும் இன்றைய தலைமுறைப் போலீசாரும்
அடுத்த தலைமுறைப் போலீசாரும் அவரைப் போன்ற தேச பக்தியும் மூளைத்திறனும் கொண்டவர்களாக
தியாகம் புரியத் தயங்காதவர்களாக இருக்க காளி அருள் புரிவாளாக!
-----------------------------------------------------------காளிமைந்தன்
வீ.செ.கருப்பண்ணன்.
தொடரும்.
தொடரும்.
No comments:
Post a Comment