போலீசாருக்கு
‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டம்.
திருப்பூரில்
பணிகள் துவக்கம்.
திருப்பூர் மாவட்டத்தில்,
போலீசாருக்கு ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட
இடம் தேர்வு செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
தமிழக முதல்வர்
ஜெயலலிதா, கடந்த மே 5ம் தேதி சட்டசபையில், போலீசாருக்கு சொந்தமாக 36 ஆயிரம் வீடுகள்
கட்டித்தரும் ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தை
அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், திருப்பூர்
மாவட்டத்தில் முதன் முறையாக இடம் தேர்வாகியுள்ளது.
திருப்பூர்
– ஊத்துக்குளி ரோட்டில் பெரியபாளையம் கிராமத்தில் ஶ்ரீமுகுந்த மாரியம்மன் அரசு மரத்தடி
வினாயகர் கோவிலுக்கு சொந்தமான 13.25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில்,
காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய, அடுக்குமாடி குடியிருப்புகள்
கட்டப்பட உள்ளன. முதல் நிலைக்காவலருக்கு 650 சதுர அடி பரப்பளவிலும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு
850 சதுரஅடி பரப்பளவிலும், டி.எஸ்.பி களுக்கு1.100 சதுர அடி
பரப்பளவிலும். வீடுகள் கட்டப்படுகின்றன.விருப்பம் உள்ள போலீசார் விண்ணப்பம் அளிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொந்த வீடு தேவையுள்ளவர்கள்,
முன்பணமாக 15 ஆயிரம் ரூபாயிக்கு வங்கி ‘டி.டி’ கொடுத்து முன் பதிவு செய்ய வேண்டும்.வட்டியில்லா
கடனாக வழங்கள்பட்டு, வீட்டுக்கான தொகை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். அதிக விண்ணப்பங்கள்
பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், ஓய்வு பெற உள்ளவர்கள் பயன்
பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
10-8-2012.
----------------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment