சேர்ன் ஆய்வுக்கூடம் |
கடவுள் துகள் ரகசியம்
பிரபஞ்சம் உர்வான வரலாறை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக, கடவுளின் அணுத்துகள் அன அழைக்கப்படும் 'ஹிக்ஸ் போசன்' என்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
பிக்பேங்
பிக்பேங் என்ற பிரளய வெடிப்புக்குப் பின் இந்த பேரண்டம் உருவானது என்று கூறப்படுகிறது. இந்த வெடிப்பு நிகழ்ந்த பொழுது அணுக்களுக்கு
நிறை இல்லை. ஆனால் இந்த அணுக்களுக்கு, ஹிக்ஸ் போசன் என்ற கட்டத்தைக் கடந்த பின்தான் நிறைகிடைக்கிறது.
முதலில் ஹிக்ஸ் போசனை கண்டு பிடிக்கும் முயற்சியை அமரிக்கா தொடங்கியது. சரியான பலன் கிடைக்காதலால் ஆராய்ச்சி கைவிடப்பட்டது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் சோதனையைத் தொடங்கியது. இதற்காக செயற்கையாக 'பெரிய ஆட்ரான் மோதுவி'
என்னும் ராட்சத ஆய்வுக்கூடத்தில்
நியூட்ரான் – புரோட்டான்களை மோதவிட்டனர். வெடித்துச் சிதறிய செயற்கை பிரளயத்தில் ஹிக்ஸ் போசனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
'ஸ்டாண்ட் மாடல்' என்ற போசானுக்கு 125 கிகா எலக்ட்ரான் வோல்ட்
இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது பேரண்டத்தின் பெரும் பகுதியை அடைந்திருக்கிறது
என்றும் நம்பப்படுகிறது. இத்துகளால் பதிக்கப்படாதது போட்டான்கள் மட்டுமே. மற்ற அணுக்கள்
இத்துகளால் மட்டுமே நிறையைப் பெருகின்றன.
தற்போது இந்த ஆராய்ச்சியில் 125 கிகா எடைகொண்ட துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது ஹிக்ஸ் போசானாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இக்கண்டு பிடிப்பு வெறும் ஆரம்ப கட்டம் தான். விஞ்ஞானிகள் போக
வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
நன்றி தினமலர்
------------------------------------------------------------------------------(தொடரும்)
எப்பா எல்லாரும் கடவுள கண்டு பிடிச்சிட்டெங்கறாங்களே..கடவுளை எப்ப தொலைச்சாங்க..
ReplyDeleteshwara.blogspot.com
// Doing agriculture at Varagambadi village near Anakatty Kerala State. //
ReplyDeleteநாங்கள் சோலையூரில் தான் இருக்கிறோம். வரகம்பாடி செல்லும் வழியில் உள்ள பெரும்மாள் கோயிலுக்கு கீழ் தான் எங்கள் காடும் உள்ளது. அட்டப்பாடியை நேசிக்கும் உங்களை போன்றவர்களுக்கு வந்தனங்கள்.