முக்கிய அறிவிப்பு.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட மாணவ, மாணவியர்க்கு;
- 2010-2011-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கீழே குறிப்பிட்டுள்ள மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு +2 டிப்ளமோ கல்வியை தொடர ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.
- 2010-2011-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கீழே குறிப்பிட்டுள்ள மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தொழிற்கல்வி பயில ரூ.25,000 மற்றும் கலைக் கல்லூரியில் பயில ரூ.12,500 உதவித் தொகை வழங்கப்படும்.
- 2010-2011-ம் கல்வியாண்டில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து அனைத்து செமஸ்டர்களிலும் 90% க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தொழில் கல்லூரியில் சேரும் (Lateral Entry) மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்.
10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு
அரசுப்பள்ளி -----------------------------------------------400 / 500 960 – 1200
அரசு உதவி பெறும் பள்ளி----------------------450 / 500 1080 – 1200
மெட்ரிக் பள்ளி -----------------------------------------475 / 500 1140 – 1200
மாற்றுத்திறனாளிகள்(அனைத்துப்பள்ளிகள் 375/500 900 – 1200
- 10-ம் வகுப்பு பயின்று ஊக்கத்தொகை பெறுவோர், கூட்ட நெரிசலைத் தவர்ப்பதற்காக, மதிப்பெண் வாரியாக மாணவர்கள் நேரில் வரவேண்டிய தேதியை வரும் ஜூன் மாதம் 20-ம் தேதியன்று வெளியாகும் முன்னணி தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் அறிவிக்கப்படும். விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டுள்ள விபரப்படி அந்தந்த தேதிகளில் மட்டும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
- +2 முடித்து தொழில் கல்வியில் (Professionlal Course) சேரும் மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) முடித்து கல்லூரி ஒதிக்கீடு (Allotment Letter) படிவத்துடன் குறிப்பில் கண்டுள்ள ஆவணங்களைச் சேர்த்து நேரில் வந்து விண்ணப்பிக்கவும்.
- +2 முடித்து கலைக் கல்லூரியில் (Non-Professional Course) சேரும் மாண வர்கள் கல்லூரியில் சேர்ந்த்தற்கான அத்தாட்சி (Admission Letter) உடன் குறிப்பில் கண்டுள்ள ஆவணங்களை சேர்த்து ஜூன் மாதம் 10-ம் தேதிக்குப்பிறகு நேரில் வந்து விண்ணப்பிக்கவும்.
குறிப்பு: தேவையான ஆவணங்கள்: மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, குடும்ப அட்டை, மற்றும் ஜாதி சான்றிதழ் (நகல்கள்) நகலுடன் சரிபார்க்க அசல் ஆவணங்கள் கொண்டு வரவும்.
இங்ஙனம்: ஓ.ஆறுமுகசாமி, நிறுவனர்,
ஶ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை
107-A செங்குப்தா வீதி, ராம் நகர், கோயம்புத்தூர்.
போன்: 0422-2236633, 2236644.
நன்றி பொது நல ஆர்வலர் திரு.வெள்ளிங்கிரி –D.S.P ஓய்வு.
No comments:
Post a Comment