ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவரகளின் கனவு நனவாகும். இந்த தேர்வு முறையில் தற்போது மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது.
இதன் படி சிவில் சர்வீஸ் தேர்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டும் முதல் நிலைத் தேர்வுகள் 450 மதிப்பெண்களுக்கு பதிலாக 400 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வுகள் இனிமேல் இரண்டு தாழ்களை கொண்ட தேரவாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விபரங்கள் வருமாறு....
முதல் தாள்
- 200 மதிப்பெண்களைக் கொண்ட தேர்வாக இருக்கும்.
- 2 மணி நேரம் தேர்வு தடக்கும்.
கேள்விகள்
· தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நடப்பு நிகழ்வுகள்.
· வரலாறு
· இந்திய அரசியல் அமைப்பு
· பொருளாதாரம்
· பொது அறிவியல்
· பொது அறிவு
ஆகிய பிரிவுகளில்இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுவாக இந்தியா பற்றிய அனைத்து விபரங்களியும் தெரிந்து வைத்திருப்பது அதிக மதிப்பெண்களைப் பெற உதவும்.
இரண்டாம் தாள்
-முதல் தாளை போன்றே 2ம் தாளும் 200 மதிப்பெண்கள் கொண்டது.
- 2 மணி நேரம் தேர்வு நடக்கும்.
கேள்விகள்
· தகவல் தொடர்பு திறன்
· தனி நபர் திறமை
· ‘காம்ப்ரிகென்சன்’
· ‘ரீசனிங்’
· முடிவு எடுப்பது மற்றும் பிரச்னையை சமாளிக்கும் திறன்கள்
· ஆங்கில மொழித்திறன்
· அடிப்படை எண் கணிதம் சார்ந்த கணக்குகள்
ஆகியவை சார்ந்த கேள்விகளே இரண்டாம் தாளில் பெருமளவில் கேட்கப்படும்.
இவை ‘அப்ஜக்டிவ்’ வகை கேமள்விகளாகவே அமைந்திருக்கும். அதாவது கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத விரும்புவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தாளின் மாதிரி வினாத்தாள்களை www.upsc.gov.in என்ற யு.பி.எஸ்.சி., இணையதளத்திலிருந்து ‘டவண்லோடு’
செய்து கொள்ளலாம்.
----------------------------------------------------------தொடரும்.
No comments:
Post a Comment