Showing posts with label பொதுக்குழு.. Show all posts
Showing posts with label பொதுக்குழு.. Show all posts

Friday, November 12, 2010

பொதுக்குழு.

முன்நாள் காவல் அதிகரிகளின் சங்கம் பொதுக்குழு கூட்டத்திற்கு அங்கத்தினர்களை அழைக்கும் தோரணை!

“காலமென்னும் காட்டாற்றில் கலந்தோடும் துரும்பாகி-
காலத்தின் கோலத்தால்-
காக்கிப் படகேறிக் கட்டளைகள் இட்டதுவும்
களமிறங்கி விளையாடி கலங்கடித்த காட்சிகளும்
கடமைதனில் மடிந்தவரை கண்ணீரில் வணங்கியதும்
கடமைச்சுமை தாங்காமல் கலங்கி மருகியதும்
இரவென்றும் பகலென்றும் இன்னல்கள் பட்டதுவும்
சோதனைகள் பலகண்டும் வேதனைகள் நேர்கொண்டும்
சாதனைகள் புரிந்ததுவும்
வெற்றி நடை போட்டு வெகுமதிகள் பெற்றதுவும்
கரை சேர்ந்த இந்நாளில் கனவுகளாய் ஓடுவதை
கண்டுருகும் என் காக்கிச்சட்டைத் தோழனே!
காலம் சிறிது. கடமை பெரிது.அதனினும் பெரிது நட்பும் நலனும்.
அன்று-கட்டித் தழுவிய உன் தோழமைத் தோளினை
இன்று - சற்று தொட்டு உறவாடி உளம் மகிழ்வோம் ஓடிவா.
அது நம் புண்பட்ட உள்ளதிலும் சற்று பூரிப்பை உண்டாக்கும்.
கூடுவோம். மகிழ்வோம். பிரிவோம்--மீண்டும் கூடும் வரை.”


இடம் -: கோவை திருச்சி சாலை,எஸ்.என். அரங்கம்.
தேதி -: 13-11-2010. காலை 10.30 மணி.
சிறப்புரை-: 1. டாக்டர் சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ். கமிசினர்
2. திருமதி பாலநாகதேவி, ஐ.பி.எஸ். டி.ஐ.ஜி
3. டாக்டர் சிவப்பிரகாசம், ஆர்.எம்.ஓ.

அழைப்பது -:
தலைவர், இராசசேகரன். கைபேசி-: 9442245187.

===========================(தொடரும்.)