காவல் துறையில் தேர்வு முறை.
எஸ்.பி., முதல் டி.ஜி.பி.,வரையிலான ஐ.பி.எஸ்., அதிகாரிகள், யு.பி.எஸ்.சி., மூலமும், டி.எஸ்.பி.,க்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு மூலமும், போலீஸ்சார் மற்றும் நேரடி எஸ்., க்கள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கடந்த, 2010ம் ஆண்டிற்கான நேரடி எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, 1,095 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்பெல்லாம், பயிற்ச்சி முடியும் போது, அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றவர்கள் சட்டம் ஒழுங்கு, பிரிவிற்கும், அதற்கடுத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என, நியமிக்கப்பட்டனர்.
இதில், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல்படையில் உள்ளவர்களும் கூட, எதிர் காலத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர்.
பயிற்சியின் போதே பிரிப்பு; ஆனால், 2010 நேரடி எஸ்.ஐ., தேர்வில், அப்போதைய உயர் பதவியில் இருந்தவர்கள் செய்த குழப்பத்தால், தேர்வின் போதே சில அளவிற்கும், ஆயுதப்படை, 161, சிறப்புக்காவல் படை, 124 பேர் என பிரித்து, பயிற்ச்சிக்காக அனுப்பப்பட்டனர்.
இதில், தாலூகா எஸ்.ஐ., க்களுக்கு, வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியிலும், மற்றவர்களுக்கு, அசோக்நகர் போலீஸ் பயிற்ச்சிப்பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி முடிந்து நாளை 15-2-2012 ம் தேதி, பாசிங் அவுட் பரேடு நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெலலிதா கலந்து கொள்கிறார்.
ஏக்கத்தில் 285 பேர்; இந்நிலையில், அசோக்நகரில் பயிற்ச்சி பெற்ற எஸ்.ஐ., கள், 285 பேரும் ஊனமாஞ்சேரிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில், தேர்வு, நேர்காணலின் போது அதிக மதிப்பெண் பெற்றவர்களும் அடங்குவர். அதிக மதிப்பெண் பெற்றும், தாலூகா போலிஸில் தங்களால் இடம் பெற முடியவில்லையே என ஏங்குகின்றனர்.
பாடத்திலும் பாராபட்சம்; அதிமட்டுமின்றி, எஸ்.ஐ., பயிற்சியில் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதும் இல்லை.
குறிப்பாக, தற்போதுள்ள பாடதிட்டத்தில், 10ல் ஒரு பங்கு கூட சட்டப்பயிற்சி அளிக்கவில்லை என புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, முதல்வருக்கு பலமுறை கடுதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பணி நியமன ஆணையிலும், தனியான பாடப்பிரிவுகள் குறித்து, அறிவிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அடுத்து வரும் நேரடி எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்று தேர்வாகும் போது பார்க்கலாம் என, கூறியுள்ளார். தி.மு.க., ஆட்ச்சியின் போது, உயர் பதவியில் இருந்த அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதலில் ஏற்பட்ட குழப்பத்தால் தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், மிகப்பெரிய அவலம் என்னவென்றால், புதிய பாடத்திட்டத்தில், உயர் அதிகாரிகளக்குறிய சின்னம், வாக்கனங்களில் பயன்படுத்தப்படும் அடையாளம் உள்ளிட்ட வற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும், காவல் துறை நிர்வாகப் பயிற்சியும், பெயரளவிற்கே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை; தற்போது தாலுகா போலீஸில், 3000 எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்தாண்டு புதியதாக, 900 பேர் தேர்வு செய்யப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது.
ஆயுதப்படை, சிறப்புகாவல் படையில் போதிய காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில், இவர்கள் எங்கு பணி அமர்த்தப்படுவர் என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, 1996, 2004 ல் தேர்வு செய்யப்பட்ட அனைவரும், தாலுகா அளவில் பணியமர்த்தப்பட்டதைப் போல், தங்களையும் தாலுகாக்களிலேயே பணியமர்த்த பயிற்சி நிறைவு பெறும் நாளன்று, முதல்வர் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
(நன்றி தினமலர்)
-----------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment