யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசம் எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத பாடத்தை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் மாணவர்களிடையே நிலவுகிறது. இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட, முதன்மையான பல அரசுப்பணிகளில் சேர்ந்து பணியாற்ற சிவில் சர்வீஸ் தேர்வு பயன் படுகிறது. இந்த தேர்வை எழுத அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை எழுத குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு முதன்மை பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதில் மாணவர்கள் தங்களுக்கு பரிச்சையமான மற்றும் பாடத்தை தேர்வு செய்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்.
பொதுவாக மாணவர்கள் வரலா று, சமூகவியல் மற்றும் அரசியல் அறிவியல் தொடர்பான பாடங்கள் தேர்வு செய்தால் எளிதாக சாதிக்கலாம் என நினைக்கின்றனர். இது சரியான கருத்து அல்ல.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதாவது இரு பாடப்பிரிவில் ஆழ்ந்த அறிவு இருந்தால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க முடியும். பட்டப்படிப்பில் வரலாறு, பொருளாதாரம் படித்திருந்தால் அந்த பாடங்களைத்தான் ஆழ்ந்து தெரிந்திருக்க முடியும். அதனால் அதையே தேர்வு செய்யலாம். மாறாக அறிவியல் பாடங்களை தேர்வு செய்யக் கூடாது.
சிவில் சர்வீஸ் தேர்வு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறுகிறது. முதன்னிலைத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாத த்தில் நடைபெறும். இதற்கு குறிப்பிடப்பட்ட 22 பாடப்பிரிவுகளில் இருந்து ஏதாவது இரண்டு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். முதனிலைத்தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதிலும் இரண்டு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
முதன்மைத்தேர்வில் எட்டுத் தாள்கள் இருக்கும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும். முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுகின்றனர். ஆனால் 700 முதல் 800 பேர்களே தெர்வு செய்யப்படுகின்றனர். மேலும் சிவில் சர்வீஸ் தேர்வின் விபரங்களை www.upsc.gov.in என்ற மத்திய அரசின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
---------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment